41 வயதான செவிலியருக்கு 380 – 760 ஆண்டுகள் சிறை தண்டனை!! காரணம் என்ன என்று தெரியுமா??
அமெரிக்கா நாட்டில் செவிலியராக பணிபுரிந்து வரும் 41 வயதான ஹீதர் பிரஸ்டீ அவர்கள் நோயாளிகளுக்கு அளவுக்கு அதிகமாக இன்சுலின் கொடுப்பதாக குற்றம் சாட்டப்பட்டதை அடுத்து அவருக்கு அமெரிக்க நீதிமன்றம் 380 முதல் 780 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.
அமெரிக்கா நாட்டில் உள்ள பென்சில்வேணியா என்ற மாகாணத்தில் 41 வயதான செவிலியர் ஹீதர் பிரஸ்டீ அவர்கள் 2020ம் ஆண்டு முதல் 2023ம் ஆண்டு வரை அந்த மாகாணத்தில் உள்ள 4 மாவட்டங்களிலும் இருக்கும் 5 முதியோர் மறுவாழ்வு மையங்களில் செவிலியராக பணியாற்றி வந்துள்ளார்.
இதையடுத்து சில தினங்களாகவே செவிலியர் ஹீதர் பிரஸ்டீ பணியாற்றி வந்த முதியோர் மறுவாழ்வு மையங்களில் 17 நோயாளிகள் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளனர். மேலும் பல நோயாளிகளுக்கு அடிக்கடி உடல்நலக் குறைவு ஏற்பட்டு வந்தது. இறந்த நோயாளிகள் பெரும்பாலும் 43 முதல் 104 வயது உடைய நோயாளிகள் என்பதால் மற்ற செவிலியர்கள் யாரும் இதை பெரிதாக கண்டுகொள்ளவில்லை.
இது தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டே இருக்க மற்ற செவிலியர்களுக்கு ஹீதர் பிரஸ்டி அவர்களின் நடத்தை மீது சந்தேகம் எழுந்தது. இதையடுத்து செவிலியர் ஹீதர் பிரஸ்டி அவர்களை பிடித்து விசாரணை நடத்தப்பட்டது. இந்த விசாரணையின் முடிவில் பல திடுக்கிடும் உண்மைகள் வெளியாகி இருக்கின்றது.
இந்த விசாரணையில் செவிலியர் ஹீதர் பிரஸ்டி அவர்கள் “நான் மன அழுத்தத்தில் இருந்தேன். அதனால் மற்றவர்களிடமும், நோயாளிகளிடமும் கோபமாக நடந்து கொண்டேன். நோயாளிகளுக்கு சர்க்கரையின் அளவை பொருட்படுத்தாமல் நான் அவர்களுக்கு அதிகப்படியான இன்சுலின் வழங்கினேன்” என்று கூறியுள்ளார். இவர் இன்சுலின் வழங்கிய 19 நோயாளிகளில் 17 பேர் சர்க்கரை நோய் இல்லாமலேயே இன்சுலின் அளவுக்கு அதிகமாக வழங்கப்பட்டு இறந்துள்ளனர்.
இதையடுத்து இந்த வழக்கு நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்து வந்தது. மேலும் செவிலியர் ஹீதர் பிரஸ்டி அவர்கள் நோயாளிகளிடமும் கடுமையாக நடந்து கொண்டதாகவும் அளவுக்கு அதிகமாக நோயாளிகளுக்கு இன்சுலின் வழங்கப்பட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டார். இதையடுத்து தனது வழக்கறிஞர்களிடம் நான் செய்த குற்றத்தை ஒப்புக் கொள்கிறேன் என்று செவிலியர் ஹீதர் பிரஸ்டி அவர்கள் கூறினார்.
இதையடுத்து பிட்ஸ்பர்க்கிலிருந்து வடக்கே உள்ள பட்லர் நகர நீதிமன்றத்தில் இது குறித்தான விசாரணை நடைபெற்று வந்தது. விசாரணையின் முடிவில் செவிலியர் ஹீதர் பிரஸ்டி அவர்களுக்கு மூன்று ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது. மேலும் 380 முதல் 780 ஆண்டுகள் சிறை தண்டனையும் வழங்கி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.