சிக்கலில் நைனார் நாகேந்திரன் – சிபிசிஐடி போலீசாரின் அதிரடி நடவடிக்கை! அதிரும் அரசியல் வட்டாரம்!

0
372

தமிழகத்தில் நடந்து முடிந்த மக்களவை பொதுத் தேர்தலின் போது, சென்னை – நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் 4 கோடி ரூபாய் பணம் கைப்பற்றப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

இதன் பின்னணியில் திருநெல்வேலி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் நைனார் நாகேந்திரன் இருப்பதாக கைதானவர்களின் வாக்குமூலம் உறுதி செய்துள்ளது. ஆனால் இதற்கு பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் மறுப்பு தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், 4 கோடி ரூபாய் வழக்கில் பாஜக மாநில நிர்வாகி கோவர்தனிடம் விசாரணை செய்ய சிபிசிஐடி போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

பாஜக மாநில தொழில்துறை பிரிவு தலைவர் கோவர்தனனுக்கு தற்போது உடல்நிலை சரியில்லாத இல்லாத காரணத்தினால், நேரில் சென்று அவரிடம் விசாரணை செய்ய சிபிசிஐடி போலீசார் முடிவெடுத்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

மேலும் கோவர்தன் நடத்திவரும் ரெஸ்டாரண்டில் தான் பணம் பரிமாற்றம் நடைபெற்றது கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், அங்கு ஒரு லட்சம் ரூபாய் ரொக்க பணம் பறிமுதல் செய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே நேற்று விக்னேஷ் என்பவரின் வீட்டுக்கு நேரில் சென்ற சிபிசிஐடி போலீசார் இந்த வழக்கில் விசாரணை மேற்கொண்டு உள்ளனர்.

முன்னதாக பத்துக்கும் மேற்பட்டோர் இடம் சிபிசிஐடி போலீசார் இந்த வழக்கு சம்பந்தமாக விசாரணை நடத்தியுள்ளனர். மேலும், இந்த வழக்கில் அனைவரின் வாக்குமூலத்தை அடிப்படையாகக் கொண்டு, நெல்லை பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனிடம் விசாரணை நடத்த சம்மன் அனுப்ப சிபிசிஐடி போலீசார் முடிவு செய்துள்ளதாகவும் அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி உள்ளது.

Previous articleராகுலை அதிர வைத்த காங்கிரஸ் பெண் வேட்பாளர்! அதிரடி பேட்டி – தொடரும் சம்பங்கள்!
Next articleஜெயக்குமார் எழுதிய மற்றொரு கடிதம்! வசமாக சிக்கப்போகும் அரசியல் புள்ளி யார்?!