உடலை குளுமையாக்கும் இளநீரில் சுவையான சர்பத் செய்து குடிச்சிருக்கீங்களா? உடனே இதை ட்ரை பண்ணுங்க!!

0
133
have-you-made-delicious-sorbet-and-drank-it-in-fresh-water-that-cools-the-body-try-this-immediately
have-you-made-delicious-sorbet-and-drank-it-in-fresh-water-that-cools-the-body-try-this-immediately

உடலை குளுமையாக்கும் இளநீரில் சுவையான சர்பத் செய்து குடிச்சிருக்கீங்களா? உடனே இதை ட்ரை பண்ணுங்க!!

இளநீர் வெயில் காலத்தில் அருந்தக் கூடிய ஒரு இயற்கை பானம் ஆகும்.இதில் அதிகளவு மினரல் இருப்பதினால் உடலுக்கு தேவையான எதிர்ப்பு சக்திகள் எளிதில் கிடைக்கும்.வெயில் காலத்தில் இளநீர் தவிர்க்க முடியாத ஒன்றாக இருந்து வருகிறது.இதில் அதிகளவு கால்சியம்,பொட்டாசியம்,சோடியம் உள்ளிட்ட ஊட்டச்சத்துக்கள் அடங்கி இருப்பதினால் தினமும் இளநீர் எடுத்துக் கொள்வது உடலுக்கு நல்லது.

அந்தவகையில் இளநீரில் சர்பத் செய்து குடித்து வந்தால் உடல் சூடு தணிந்து இயற்கையான முறையில் குளிர்ச்சி பெறும்.இளநீர் உடல் சூடு,உடல் பருமன்,நோய் எதிர்ப்பு சக்தி குறைபாடு,உடல் சோர்வு உள்ளிட்ட பாதிப்புகளை குணப்படுத்த உதவுகிறது.

தேவையான பொருட்கள்:-

1)இளநீர் – 1 கப்
2)இளநீர் வழுக்கை – 1 கப்
3)நன்னாரி – 4 தேக்கரண்டி
4)வெள்ளை சர்க்கரை – 4 தேக்கரண்டி

செய்முறை:-

முதலில் ஒரு முழு இளநீர் எடுத்துக் கொள்ளவும்.பிறகு அதில் சிறிது ஓட்டை போட்டு அதனுள் இருக்கும் நீரை ஒரு கிண்ணத்திற்கு ஊற்றிக் கொள்ளவும்.

அடுத்து இளநீரை இரண்டாக நறுக்கி அதில் இருக்கும் வழுக்கையை தனியாக பிரித்து ஒரு கிண்ணத்தில் போட்டுக் கொள்ளவும்.

அதன் பின்னர் ஒரு மிக்ஸி ஜார் எடுத்து அதில் இளநீர் வழுக்கையை போட்டு ஒரு சுத்து விடவும்.பிறகு அதில் இளநீர் தண்ணீர் ஊற்றி ஒருமுறை அரைத்து எடுக்கவும்.

அதன் பிறகு நன்னாரி சர்பத் 4 தேக்கரண்டி மற்றும் வெள்ளை சர்க்கரை 4 தேக்கரண்டி சேர்த்து அரைத்து ஒரு கிளாஸிற்கு ஊற்றிக் கொள்ளவும்.அவ்வளவு தான் உடலுக்கு குளிர்ச்சி தரக் கூடிய சுவையான இளநீர் சர்பத் தயார்.மேலும் குளிர்ச்சி கிடைக்க சிறிது ஊறவைத்த சப்ஜா விதை சேர்த்து கலந்து குடிக்கலாம்.

Previous article200 ரூபாய்க்குள் ப்ரிட்ஜ் வேண்டுமா? இதை பயன்படுத்தினால் நீங்கள் 100 வயது வரை ஆரோக்கியமாக வாழலாம்!!
Next articleAC Buying Guide in Tamil: ஏசி வாங்க போறீங்களா? அப்போ இதை தெரிஞ்சுக்கோங்க..!