ஒரே நேரத்தில் 300 விமான ஊழியர்கள் லீவு!! வேலையிலிருந்தே பணிநீக்கம் செய்து அதிரடி காட்டிய விமான நிறுவனம்!!
ஒரே நேரத்தில் 300-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் லீவு போட்டதின் எதிரொலியாக உள்நாடு மற்றும் வெளிநாட்டுக்குச் செல்லும் சுமார் 86 விமானங்கள் ரத்து செய்யப்பட்டது.
இதனால் முன்னறிவிப்பின்றி ரத்து செய்யப்பட்டதின் விளைவாக பயணிகள் குறித்த நேரத்தில் வெளிநாடுகளுக்கு பயணம் செய்ய முடியாமல் தவித்தனர்.
இதனால் பயணிகள் விமான நிலைய ஊழியர்களிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
ஒரே நேரத்தில் உடல்நிலை சரியில்லாததாகக் காரணம் கூறி 300-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் லீவு போட்ட நிலையில் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் சுமார் 25 ஊழியர்களை அதிரடியாக பணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் ஊழியர்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் ஊழியர்கள் திடீரென விடுப்பு எடுத்ததால் அது நிறுவனத்திற்கு நல்ல பெயரை சேதம் விளைவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஊழியர்களின் இச்செயல் பொது நலனை குலைப்பதாகவும் மேலும் நிறுவனத்திற்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிறுவனமானது நெடுங்காலமாக அரசின் கட்டுப்பாட்டில் இருந்தது. பின்னர் கடந்த 2022 ஆம் ஆண்டு டாடா குழுமத்தால் கையகப்படுத்தப்பட்டது. இதன் பின்னர் டாடா நிறுவனமானது பணி தொடர்பாக புதிய ஒப்பந்தம் ஒன்றை வெளியிட்டு உள்ளதாகவும் இதனால் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் தான் சுமார் 300க்கும் மேற்பட்ட ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிலைய ஊழியர்கள் உடல்நிலையை காரணம் காட்டி ஒரே நேரத்தில் லீவு போட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.