இந்த மாதிரியான யூடியூப் கன்டன்ட் வெளியிட தடை? சேனல்களுக்கு அலார்ட் கொடுத்த உயர்நீதிமன்றம்!! 

Photo of author

By Rupa

இந்த மாதிரியான யூடியூப் கன்டன்ட் வெளியிட தடை? சேனல்களுக்கு அலார்ட் கொடுத்த உயர்நீதிமன்றம்!!

யூடியுபர் சவுக்கு சங்கர் பெண் காவல் அதிகாரிகளை அவதூறாக பேசியதால் சில தினங்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டார். இவர் அரசியல் ரீதியான பல கருத்துக்களை யூட்யூபில் தெரிவித்து வருவார். அது பெரும் சர்ச்சையாகி பரபரப்பை ஏற்படுத்தும். தற்போது அவதூராக பேசியுள்ளார் என்ற புகாரின் பேரில் கைது செய்யப்பட்ட சவுக்கு சங்கர் மீது கிட்டத்தட்ட ஆறு வழக்குகளுக்கு மேல் தொடர்ந்து பதிவாகி வருகிறது.

அவரை ஜாமினில் கூட வெளியே எடுக்க முடியாத அளவிற்கு வழக்குகள் குவிந்துள்ளது. கடைசியாக அவர் அவதூறாக பேசிய வீடியோவானது ரெட்பிக்ஸ் என்ற சேனலில் வெளியானது. இதனை வெளியிட்டதன் காரணமாக அதன் உரிமையாளர் மீதும் வழக்கு பதிவு செய்தனர். மேற்கொண்டு இந்த வழக்கிலிருந்து விடுவிக்குமாறு அந்த ஊடகத்தின் உரிமையாளர் ஜாமின் கேட்டு மனு அளித்திருந்தார்.

இந்த விசாரணையானது இன்று நீதிபதிகள் முன்னிலையில் அமர்வுக்கு வந்தது. அதில் நீதிபதிகள் கூறியதாவது, சவுக்கு சங்கர் போல தேவையற்ற கருத்துக்களை பேசி வெளியிடும் பல யூடியுப் சேனல்கள் உள்ளது. இதுபோல சேனல்களையெல்லாம் கட்டாயம் கட்டுப்படுத்த வேண்டும். அதேபோல நேர்காணல் பேச வருபவர்களிடம் இந்த கேள்விகளை தான் கேட்க வேண்டும் என்று வரைமுறையை வைக்க வேண்டும். அதை விட்டுவிட்டு அவர்களின் பதிலை தூண்டும் வகையில் கேள்விகள் அமைப்பது தவறு. அதன்படி பார்க்கும் பொழுது கேள்வி கேட்பவரும் ஒரு குற்றவாளி தான் என கூறியுள்ளார்.