இதய படபடப்பு முதல் சிறுநீரக கல்லடைப்பு வரை.. இந்த பழத்தில் தீர்வு இருக்கு!!
இன்று உயிரை குடிக்கும் நோய்கள் எளிதில் உருவாகும் அளவிற்கு மோசமான உணவுமுறை பழக்கத்தை பின்பற்றி வருகின்றோம்.உடல் ஆரோக்கியத்தின் மீதான அக்கறை குறைந்து உணவின் சுவை மீது அக்கறை கூடிவிட்டது.
சிறு நோய் பாதிப்பு ஏற்பட்டால் கூட அதை மருந்து இல்லாமல் குணப்படுத்திக் கொள்ள முடியாத நிலையில் உள்ளோம் என்பது தான் கசப்பான உண்மை.உடலுக்கு ஆரோக்கியத்தை கொடுக்கும் உணவுகளை தேர்ந்தெடுத்து உண்டு வந்தால் நோய் பாதிப்பில் இருந்து தப்பித்து விடலாம்.
காய்கறிகள்,பழங்கள் அதிகளவு எடுத்துக் கொள்ள வேண்டும்.அந்தவகையில் தினமும் ஒரு பேரிக்காய் சாப்பிட்டு வந்தால் உடலில் உள்ள ஆபத்தான நோய்கள் கூட எளிதில் குணமாகி விடும்.
பேரிக்காயில் வைட்டமின் ஏ,பி,பி2,நார்ச்சத்து,தாமிரம்,பொட்டாசியம்,இரும்பு சத்து,சுண்ணாம்பு சத்து உள்ளிட்டவை நிறைந்திருக்கிறது.
தினமும் பேரிக்காய் சாப்பிட்டு வந்தால் குணமாகும் நோய்கள்:-
1)உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்கள் தினமும் ஒரு பேரிக்காய் சாப்பிட வேண்டும்.
2)உடலில் உள்ள புற்றுநோய் செல்களை அழிக்க உதவுகிறது.
3)செரிமான பிரச்சனை மற்றும் மலச்சிக்கல் பாதிப்பை முழுமையாக குணமாக்க உதவுகிறது.
4)ஒரு சிலருக்கு அடிக்கடி இதய படபடப்பு ஏற்படும்.இதை சரி செய்ய தினமும் பேரிக்காய் ஜூஸ் சாப்பிட்டு வரலாம்.
5)கர்ப்பிணி பெண்களுக்கு ஏற்படும் உடல் சோர்வை முழுமையாக கட்டுப்படுத்த உதவுகிறது.
6)தாய்ப்பால் முறையாக சுரக்க பேரிக்காய் சாப்பிட வேண்டும்.
7)சிறுநீரகத்தில் உருவாகும் கற்களை கரைக்க பேரிக்காய் சாப்பிடலாம்.
8)கண் தொடர்பான பாதிப்புகள் நீங்கும்.
9)உடல் சூடு முழுமையாக தணியும்.
10)நரம்பு தளர்ச்சி பாதிப்பு நீங்கும்.நரம்புகள் வலுப்பெறும்.