கொளுத்தி எடுக்கும் வெயில் நேரத்தில் வயிறு குளிர இதை ஒரு கிளாஸ் குடியுங்கள்!!

0
138
drink-a-glass-of-this-to-cool-your-stomach-in-the-scorching-sun
drink-a-glass-of-this-to-cool-your-stomach-in-the-scorching-sun

கொளுத்தி எடுக்கும் வெயில் நேரத்தில் வயிறு குளிர இதை ஒரு கிளாஸ் குடியுங்கள்!!

இந்த வெயில் காலத்தில் உடலையும்,வயிறையும் குளிர்ச்சியாக வைத்துக் கொள்ள வேண்டும்.உடலில் இருந்து அதிகளாகவு நீர் வெளியேறினால் அவை உடலை வறட்சியடைய செய்துவிடும்.உடலை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ள பழச்சாறு,சர்பத்,மில்க் ஷேக்,இளநீர்,கருப்புச்சாறு உள்ளிட்டவற்றை அருந்த வேண்டும்.

அந்த வகையில் புதினா பானம் செய்து குடித்து வந்தால் உடல் சூடு முழுமையாக குறைந்து குளுமையாகும்.இதற்கு தேவைப்படும் பொருட்கள் என்னவென்று கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

தேவைப்படும் பொருட்கள்:-

1)எலுமிச்சை சாறு
2)தேன்
3)புதினா
4)உப்பு
5)சீரகம்

செய்முறை:-

முதலில் ஒரு எலுமிச்சம் பழத்தை இரண்டாக நறுக்கி அதன் சாற்றை பிழிந்து வைத்துக் கொள்ளவும்.

பிறகு 5 புதினா இலையை நீரில் கழுவி சுத்தம் செய்து வைத்துக் கொள்ளவும்.அதன் பின்னர் மிக்ஸி ஜார் எடுத்து சுத்தம் செய்து வைத்துள்ள புதினா இலைகளை போடவும்.

பிறகு சீரகம்,பிழிந்து வைத்துள்ள எலுமிச்சை சாறு சேர்க்கவும்.அதன் பின்னர் குளிர்ந்த நீர் ஒரு கிளாஸ் மற்றும் சிறிது உப்பு,தேன் சேர்த்து ஒரு சுத்து விடவும்.இதை ஒரு கிளாஸிற்கு ஊற்றி குடித்து வந்தால் உடல் குளுமையாகும்.

தேவையான பொருட்கள்:-

1)சப்ஜா விதை
2)குளிர்ந்த நீர்
3)எலுமிச்சை சாறு
4)வெள்ளை சர்க்கரை

செய்முறை:-

ஒரு கிண்ணத்தில் 1/4 தேக்கரண்டி சப்ஜா விதை போட்டு தண்ணீர் ஊற்றி 10 நிமிடங்களுக்கு ஊற வைக்கவும்.பின்னர் ஒரு கிளாஸில் எலுமிச்சம் பழத்தின் சாற்றை ஊற்றிக் கொள்ளவும்.பிறகு குளிர்ந்த நீர் ஊற்றி கலக்கவும்.

அதன் பின்னர் தேவையான அளவு வெள்ளை சர்க்கரை மற்றும் ஊற வைத்துள்ள சப்ஜா விதைகளை போட்டு கலந்து குடித்து வந்தால் உடல் குளுமையாகும்.

Previous articleஒற்றைத் தலைவலி பிரச்சனையா? கொத்தமல்லி டீ தயார் செஞ்சு குடிங்க! 
Next articleஎச்சரிக்கை.. பல ஆரோக்கிய நன்மைகள் அடங்கியிருக்கும் இளநீரை இவர்களெல்லாம் குடிக்கக் கூடாது!!