ஆப்ரேஷன் இல்லாமலேயே மூல நோயை எளிமையாக சரி செய்யலாம்!! காலை மற்றும் இரவு இதை மட்டும் சாப்பிடுங்கள்!!
மூல நோயானது நம் இந்தியர்கள் பலரும் சந்திக்கும் ஓர் பிரச்சனை என்றே கூறலாம். தற்போதைய நடைமுறையில் உள்ள உணவு பழக்கவழக்கங்கள் வாழ்க்கை முறை போன்றவை இதற்கு முக்கிய காரணமாக அமைகிறது. குறிப்பாக அதிக அளவு துரித உணவுகளை எடுத்துக் கொள்பவர்களுக்கு தான் இந்த மூல நோயானது விரைவில் வந்து விடுகிறது. 20 வயதை கடந்து விட்டாலே இதன் பாதிப்புக்கு உள்ளாக நேரிடும். நமது ஆசனவாய் பகுதியில் ரத்த குழாய்கள் இருக்கும்.
இந்த ரத்த குழாய்கள் வீக்கம் அடையும் பொழுது உள்மூலம் வெளிப்புற மூலம் பவுத்திரம் போன்றவற்றால் பாதிபடைகிறது. பொதுவாக உள்மூலம் இருப்பவர்களுக்கு இதன் அறிகுறிகள் மிகவும் அரிது தான். ஆனால் வெளிப்புற மூலம் பவுத்திரம் போன்றவை உடனடியாக அதன் அறிகுறிகளை காட்டிவிடும். உடனே மருத்துவமனைக்கு செல்ல நேரிடும்.
குறிப்பாக மலம் கழிக்கும் பொழுது ரத்தப்போக்கு அந்த இடத்தில் எரிச்சல் போன்றவை உண்டாகும். ஆனால் நம் வீட்டில் இருந்தே மூலம் பிரச்சனையை சரி செய்யலாம்.
தேவையான பொருட்கள்:
சோற்றுக்கற்றாழை 5 கிராம்
துத்தி இலை விழுது ஒரு கைப்பிடி
நெல்லிக்காய் துருவல் 10 கிராம்
கடுக்காய் தூள் 10 கிராம்
பனைவெல்லம் சிறிதளவு
செய்முறை:
ஒரு பாத்திரத்தில் ஒரு கிளாஸ் அளவுக்கு தண்ணீர் ஊற்ற வேண்டும்.
அதில் சிறிதளவு பனைவெல்லத்தை சேர்க்க வேண்டும்.
இந்த பனைவெல்லம் சற்று சூடு ஏறியதும் அதில் அரைத்த துத்தி இலை மற்றும் நெல்லிக்காய் துருவல் இவை இரண்டையும் சேர்க்க வேண்டும்.
இதனுடன் தோல் நீக்கிய 5 கிராம் அளவு எடுத்து வைத்துள்ள கற்றாழையும் சேர்க்க வேண்டும்.
இவை நன்றாக சூடாகி வரும் பொழுது இறுதியில் கடுக்காய் தோலை சேர்க்க வேண்டும்.
இது லேகியம் பதம் வரும் வரை நன்றாக கலக்கி வர வேண்டும்.
லேகியம் பதத்திற்கு வந்ததும் அடுப்பை அணைத்துவிட்டு ஒரு பாத்திரத்தில் எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.
இதனை காலை மற்றும் இரவு என இரண்டு நேரமும் அரை தேக்கரண்டி என்ற அளவில் சாப்பிட்டு வர வேண்டும்.
இதனை தொடர்ந்து சாப்பிட்டு வர மூல நோய் சரியாகும்.