படுத்ததும் 5 நிமிடத்தில் தூக்கம் வர எளிய வழி!! உடனே இதை ட்ரை பண்ணுங்க!!

படுத்ததும் 5 நிமிடத்தில் தூக்கம் வர எளிய வழி!! உடனே இதை ட்ரை பண்ணுங்க!!

பலருக்கும் வேலை பளு உடல் உபாதைகள் போன்றவற்றால் தூக்கம் இல்லாமல் அவதிபடுவதுண்டு.ஆனால் பொதுவாகவே 5 மணி நேரத்திற்கு மேலாக ஒரு மனிதர் நன்றாக உறங்க வேண்டும். அப்பொழுதுதான் உடலானது ஆரோக்கியமாக இருக்கும். அதுமட்டுமின்றி அடுத்த நாள் வேலைகளிலும் உற்சாகத்துடன் செயல்பட முடியும். சரிவர தூக்கம் வரவில்லை என்றால் செரிமான பிரச்சனை, மலசிக்கல் மன அழுத்தம் போன்றவற்றை சந்திக்க நேரிடும். இதை தவிர்த்து பல உடல் உபாதைகள் அவரவர் உடலுக்கு ஏற்ப வந்துவிடும். இதனை சரி செய்ய மருத்துவமனைகளை நாட வேண்டியிருக்கும். ஆனால் இதெல்லாம் இன்றி எளிமையான முறையில் இரவு நேரங்களில் ஐந்தே நிமிடத்தில் தூங்கலாம்.

தேவையான பொருட்கள்:
கடுகு எண்ணெய்
கசகசா
பால்

செய்முறை:
கசகசா இரண்டு ஸ்பூன் அளவு எடுத்து தண்ணீரில் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
நன்றாக ஊறியதும் அதனை அரைத்துக் கொள்ள வேண்டும்.
பாலை நன்றாக காய்ச்சி எடுத்துக் கொள்ள வேண்டும்.
பின்பு இதனை பாலில் சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும்.
பால் நன்றாக ஆறியதும் இதனை பருகலாம்.
தூங்குவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பாக இதனை செய்ய இரவு முழுவதும் நன்றாக தூங்க முடியும்.
அதேபோல கடுகு எண்ணெயை சிறிதளவு வெதுவெதுப்பாக சூடு செய்ய வேண்டும்.
இதனை கால்பகுதியில் நன்றாக தேய்த்து 5 நிமிடம் மசாஜ் செய்து வர இரவு முழுவதும் எந்த ஒரு தடையின்றி நன்றாக உறங்கலாம்.