சென்னை தியாகராய நகரிலுள்ள ரங்கநாதன் தெரு எப்போதுமே பரபரப்புடன் இருக்கும் தெரு. சரவணா ஸ்டோர்ஸ், ஜெயசந்திரன் என பிரபலமான ஜவுளி கடைகள் அமைந்திருக்கும் இந்த தெருவில் சராசரியாக ஒரு நாளைக்கு 10 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வரையிலான மக்கள் இங்கு வந்து செல்வார்கள். தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை காலங்களில் ல்டச்சத்தை தாண்டும்.
அப்படிபட்ட இடம் கொரோனா ஊரடங்கினால் சுமார் 50 நாட்களுக்கு மேலாக மூடி கிடந்தது. இதனால் இந்த ஒரு தெருவை நம்பி பிழைப்பை நடத்தும் ஆயிரக் கணக்கான மக்கள் சரியான வருமானமின்றி தவித்து வந்தனர். கடந்த சில தினங்களுக்கு முன் ஊரடங்கு தளர்த்தப்பட்டு கட்டுபாட்டுகளுடன் சிறிய கடைகளை திறக்க தமிழக அரசு அனுமதியளித்தது. இதனையடுத்து ரங்கநாதன் தெருவில் பெரிய கடைகளை தவிர்த்து மற்ற கடைகள் திறக்கப்பட்டன.
இந்நிலையில் இங்கு ஆய்வை மேற்கொண்ட மாநகராட்சி அதிகாரிகள் கிருமி நாசினி கொண்டு சுத்தப்படுத்துதல், முக கவசம் அணிதல், தனி மனித இடைவெளியை பின்பற்றுதல் என கொரோனா பாதுகாப்பு விதிகள் எதையும் பின்பற்றாததையடுத்து அனைத்து அனைத்து கடைகளையும் உடனடியாக மூட அதிரடியாக உத்தரவிட்டது. இதனையடுத்து சுமார் 150 கடைகளும் மூடப்பட்டன.