சவுக்கு சங்கர் மீது பாய்ந்த குண்டர்சட்டம் திமுகவின் அரசியல் பழிவாங்கும் செயல்!! சீமான் காட்டம்!!
சவுக்கு சங்கர் பெண் போலீசார் பற்றி அவதூறாக பேசியதால், சவுக்கு சங்கர் மீது பல்வேறு வழக்குப்பதிவு செய்து கோவை போலீசாரால் கைது செய்யப்பட்டார். இவரை பேட்டி எடுத்த பெலிக்ஸ் என்பவரையும் போலீசார் கைது செய்து வழக்கு பதிவு செய்து உள்ளனர்.
மேலும் தனது யூடியூப் தளத்தில் முத்துராமலிங்கத் தேவர் குறித்து தவறாக பேசியதாக கூறி கோவை பந்தய சாலை காவல் நிலையத்தில் முத்து என்ற வழக்கறிஞர் அளித்துள்ள புகரில் இரு பிரிவினரிடையே கலவரத்தை தூண்டும் விதமாக பேசியுள்ளதாக மேலும் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் அவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது.
இந்நிலையில் சவுக்கு சங்கர் மீதான இந்த குண்டர் சட்டம் திமுக அரசின் பழிவாங்கும் செயல்பாடாக உள்ளதாக சீமான் கண்டித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.மேலும் அவர் கண்டனமும் தெரிவித்துள்ளார்.
மேலும் சவுக்கு சங்கர் பெண் காவல் துறையினர் மீது அவதூறாக பேசியதால் ஏற்கனவே பல்வேறு வழக்குகள் அவர் மீது போடபட்டுள்ளது. இந்நிலையில் அவர் மீது போடப்பட்டிருக்கும் குண்டர் சட்டம் தேவையற்றதாக உள்ளது என கண்டனம் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே கோவை சிறையில் வைத்து தன்னை கொன்று விடுவார்கள் என தனது உயிருக்கு ஆபத்து உள்ளதாக அவர் கூறி இருப்பது தனக்கு அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது என தெரிவித்துள்ளார்.
மேலும் சிறையில் வைத்து அவர் தாக்கப்பட்டிருந்தால் கடுமையாக எதிர்ப்பதாகவும் இது போன்ற அடக்கு முறையை ஏற்கவும், அங்கீகரிக்கவும் கூடாது என கடிந்துள்ளார்.
எனவே அவர் மீது போடப்பட்டுள்ள குண்டர் சட்டத்தை திரும்ப பெற வேண்டும் எனவும், ஏற்கனவே போடப்பட்டுள்ள இந்தியத் தண்டனைச் சட்டத்தின் படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறித்துள்ளார். மேலும் சவுக்கு சங்கரை பேட்டி எடுத்த பெலிக்ஸ் என்பவரின் மீதான கைது ஒடுக்குமுறையை கைவிட வேண்டும் என கண்டனம் தெரிவித்துள்ளார்.