முன்பதிவு செய்யாமல் கூட இவர்களெல்லாம் லோயர் பர்த் வாங்கிக்கொள்ளலாம்!! ரயில்வே நிர்வாகம் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!!
ரயில் பயணத்தை பெரும்பாலான மக்கள் தற்பொழுது தேர்வு செய்வதால் அதற்கேற்ப அதன் வசதியை மேம்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் தொலைதூர பயணம் மேற்கொள்பவர்கள் லோயர் அப்பர், மிடில், பர்த் இருப்பதை பெரிதும் விரும்புவர். இவ்வாறு இருப்பதால் இது அவர்கள் பயண நேரத்தின் சவுகரியத்தை மேலும் அதிகரிக்கும்.
அந்த வகையில் சமீபத்தில் சூப்பர் செயலி மூலம் இனி வரும் நாட்களில் லோயர் அப்பர் பர்த் எத்தனை இடங்கள் காலியாக உள்ளது என்பதை கண்டறியப்பட்டது. அதேபோல அதனை கண்டறிந்து காலியாக உள்ளதை கண்டு உங்களுக்கு விருப்பமுள்ள இடத்தையும் முன்பதிவு செய்து கொள்ளும் வசதியும் கொண்டுவரப்பட்டது.
இந்நிலையில் ரயில்வே நிர்வாகம் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் லோயர் பர்த் சீட்டுக்கான முன்பதிவு அனைவருக்கும் பொருந்தாது என கூறியுள்ளனர். குறிப்பாக இதற்கு மாற்றுத்திறனாளிகளுக்கு தான் முன்னுரிமை வழங்கப்படும் என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர். பயணம் செய்யும் பயணிகள் பலரும் ஜன்னல் அருகில் இருக்கும் சீட்டை தான் புக் செய்கின்றனர்.
இதனால் முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு ஏற்றவாறு இடம் கிடைப்பதில்லை. இதனை கருத்தில் கொண்டு தான் மாற்றுத்திறனாளிகளுக்கு சௌகரியத்தை ஏற்படுத்தும் வகையில் லோயர் பர்த் புக் செய்யும் வசதியானது கொண்டுவரப்பட்டுள்ளது. அந்தவகையில் இவர்களுக்கு ஸ்லீப்பர் பகுதியில் கூடுதல் நான்கு இருக்கைகள் தருவதாக தெரிவித்துள்ளனர்.
அதேபோல ஏசி கோச்சில் மாற்றுத்திறனாளி உடன் வரும் நபர்களும் இருக்கும்படி இரண்டு சீட்டுகள் ஒதுக்கப்பட்டுள்ளதது. இதே போல கர்ப்பிணி பெண்கள் மற்றும் வயது முதிர்ந்தவர்களுக்கும் இது பொருந்தும் எனவும் முன்பதிவு செய்ய முடியவில்லை என்றாலும் ரயில் நிர்வாக அதிகாரியை அணுகி லோயர் பெர்த் இருக்கையை வாங்கிக் கொள்ளலாம் என்று கூறியுள்ளனர்.