இரவு நேரத்தில் பரோட்டாவை புல் கட்டுக்கு கட்டுபவர்களுக்கு ஒரு ஷாக் நியூஸ்!! கொஞ்சம் யோசிங்க மக்களே!
இன்றுள்ள மக்கள் வயிற்று பசிக்காக சாப்பிடுவதில்லை.வாய் ருசிக்காக மட்டுமே சாப்பிடுகின்றனர்.சத்துமிக்க பழம்,காய்கறிகள்,தானியங்களை ஒதுக்கி விட்டு சிக்கன் வெரைட்டி,மைதா உணவுகளை அதிகம் சாப்பிட்டு வரும் நபர்களின் உடல் ஆரோக்கியம் விரைவில் கெட்டுவிடும்.
பொதுவாக இரவு நேரத்தில் தான் பரோட்டா விற்பனை ஜோராக நடக்கிறது.பன் பரோட்டா,நெய் ப்ரோட்டா,கிளி பரோட்டா,கொத்து பரோட்டா என்று பல வெரைட்டிகளில் கிடைக்க கூடிய மைதா பரோட்டாக்களுக்கு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் அடிமையாக உள்ளனர்.
சுவையில் குறை இல்லை என்றாலும் இவை ஆரோக்கியமான உணவா? என்பது தான் கேள்வியாக உள்ளது.நார்ச்சத்து,புரதம்,கால்சியம்,இரும்பு,பொட்டாசியம்,வைட்டமின்கள் உள்ளிட்ட சத்துக்கள் அடங்கி இருந்தால் அவை ஆரோக்கியமான உணவு ஆகும்.ஆனால் எந்த ஒரு சத்துக்களும் இல்லாத ஒரு மைதா உணவை சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்தை எந்தளவிற்கு பாதிக்கும் என்பதை உணர வேண்டும்.
மைதாவில் நார்ச்சத்து மிக மிக குறைவு.இதனால் மைதாவால் ஆன உணவுகளை சாப்பிடுவதால் அவை எளிதில் செரிமானமாகாது.இதனால் மலச்சிக்கல்,செரிமானக் கோளாறு,வயிறு உப்பசம் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படும்.
பரோட்டாவில் அதிகளவு கெட்ட கொழுப்புகள் நிறைந்திருப்பதால் அதனை அதிகளவில் உண்ணும் பொழுது மாரடைப்பு,இரத்த குழாய் அடைப்பு போன்ற பாதிப்புகள் ஏற்படும்.
தொடர்ந்து மைதா உணவுகளை சாப்பிடுவதால் உடல் எடை மளமளவென அதிகரித்து பல நோய்களுக்கு வழிவகுத்து விடும்.
இரவு நேரத்தில் பரோட்டா சாப்பிடுவதால் சிலருக்கு வயிறு வலி,வயிறு வீக்கம்,வயிற்றுப்போக்கு,தூக்கமின்மை உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது.எனவே மைதாவால் ஆன பொருட்களை இரவு நேரத்தில் சாப்பிடுவதை முழுமையாக தவிர்ப்பது நல்லது.