சற்றுமுன்: மாடு வளர்ப்பவர்களுக்கு பறந்த அதிரடி உத்தரவு!! உரிமம் இல்லையென்றால் அபராதம்!!

Photo of author

By Rupa

சற்றுமுன்: மாடு வளர்ப்பவர்களுக்கு பறந்த அதிரடி உத்தரவு!! உரிமம் இல்லையென்றால் அபராதம்!!

சென்னை மாநகராட்சி ஆனது செல்லப்பிராணிகளுக்கு உரிமம் பெற வேண்டும் என்பதை தொடர்ந்து தற்பொழுது மாடுகளை வளர்ப்பவர்களும் அதன் தொழுவத்திற்கு உரிமம் எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. இது குறித்து சென்னை மாநகராட்சி கூறியிருப்பதாவது, சென்னையில் பலரும் மாடுகளை வளர்த்து வருகின்றனர். இதில் போதிய இட வசதியும் தொழுவமும் இன்றி அதிக எண்ணிக்கையில் மாடுகளை வளர்க்கின்றனர்.

இவ்வாறு வளர்க்கப்படும் மாடுகள் பராமரிப்பு வசதியின்றி தெருகளில் அலைகிறது. இதனால் பொதுமக்களுக்கு மிகவும் இடையூறாக உள்ளது. அதுமட்டுமின்றி சில நேரங்களில் இந்த மாடுகள் விபத்திலும் சிக்குகின்றனர். மேலும் சாலைகளில் ஒட்டப்பட்டிருக்கும் போஸ்டர், பிளாஸ்டிக் காகிதம் போன்ற பொருட்களை சாப்பிட்டு வருகிறது. இதனை அனைத்தையும் கருத்தில் கொண்ட மாநகராட்சியானது இனி சென்னையில் வளர்க்கப்படும் மாடுகள் அனைத்திற்கும் அதன் தொழுவ உரிமம் பெற வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளனர்.

இந்த உரிமத்தை அடுத்த மாதத்திற்குள் பெற்று விட வேண்டும் என்றும் கூறியுள்ளனர். உரிமம் இல்லாமல் தொழுவம் நடத்தும் உரிமையாளர்கள் மீது மேற்கொண்டு அபராதம் விதிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளனர். செல்லப்பிராணிகள் வளர்ப்பவர்களுக்கு எப்படி இணையத்தின் வழியாக உரிமம் பெரும் வசதி கொண்டுவரப்பட்டதோ இதற்கும் அவ்வாறு கொண்டு வரப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இணையத்தின் வழியாக உரிமம் பெறுவதற்கான அதிகாரப்பூர்வ தகவல்கள் நாளடைவில் தெரிவிக்கப்படும் என்று கூறுகின்றனர்.