இரவில் தூக்கம் கெட்டு ஆந்தை போல் விழித்துக் கொள்கிறீர்களா? அப்போ தூங்கச் செல்வதற்கு முன் இதை மறக்காமல் செய்யுங்கள்!!
நவீன உலகில் இயந்திரம் போல் இயங்கி கொண்டிருக்கும் மனிதர்களுக்கு ஓய்வு மிக முக்கியமான ஒன்றாகும்.காலையில் இருந்து மாலை அல்லது இரவு வரை உடல் உழைப்பை போடும் நபர்கள் இரவில் நிம்மதியான தூக்கத்தை அனுபவத்தால் மட்டுமே மறுநாள் சுறுசுறுப்பாக வேலை பார்க்க முடியும்.
ஆனால் சிலருக்கு இரவில் நிம்மதியான தூக்கம் கிடைக்காது.எதிர்காலத்தை பற்றி நினைப்பது,கடந்த கால கசப்பான நினைவுகளை நினைப்பது என்று தூக்கத்தை கெடுக்க கூடிய விஷயங்களை பற்றி ஆழ்ந்து சிந்திப்பதால் இரவில் தூக்கத்தை தொலைத்து ஆந்தை போல் விழித்திருக்கும் நிலை ஏற்படுகிறது.
தொடர்ந்து நல்ல உறக்கத்தை இழந்தால் உடல் ஆரோக்கியம் கெட்டுவிடும்.எனவே இரவில் நிம்மதியான தூக்கத்தை உறங்க கீழே கொடுக்கப்பட்டுள்ள டிப்ஸை தொடர்ந்து பின்பற்றுங்கள்.
தினமும் இரவு உணவை 7 முதல் 8 மணிக்குள் உண்டு விடுங்கள்.இவ்வாறு செய்வதினால் செரிமான பிரச்சனை,வயிறு உப்பசம் ஏற்படாமல் நல்ல உறக்கத்தை அனுபவிக்க முடியும்.
அது மட்டுமின்றி எளிதில் செரிக்க கூடிய ஆரோக்கியமான உணவுகளை மட்டுமே இரவு நேரத்தில் எடுத்துக் வேண்டும்.
காலையில் ஒருமுறை குளித்திருந்தாலும் இரவில் வெந்நீரில் குளியல் போட்டால் நல்ல தூக்கம் கிடைக்கும்.
தங்களுக்கு பிடித்த இனிமையான பாடல்களை கேட்டு கொண்டு படுத்தால் நல்ல தூக்கம் வரும்.தூங்கச் செல்வதற்கு முன்னர் தியானம்,யோகா செய்வதினால் மன அமைதி உண்டாகி நல்ல தூக்கம் கிடைக்கும்.பசும் பாலில் மஞ்சள்,மிளகு பொடி சேர்த்து குடித்தால் அமைதியான தூக்கம் கிடைக்கும்.