முட்டி மோதி முளைக்கும் ஞானப்பல்லால் ஏற்படும் வலி.. இதை செய்தால் அவஸ்த்தை குறையும்!!
ஒவ்வொரு மனிதருக்கும் குறிப்பிட்ட வயதில் பற்கள் விழுந்து முளைப்பது இயல்பானவை.சிறுவயதில் விழுந்து முளைக்கும் பற்களால் அதிகளவு வலி,வீக்கம் ஏற்படாது.ஆனால் இளம் வயதில் அதாவது 17 முதல் 25 வயதிற்குட்பட்ட நபர்களுக்கு முளைக்கும் ஞானப்பால் அதிக வலி,வீக்கத்தை உண்டு பண்ணும்.
இவை கடவாய் பற்கள் வரிசையில் இறுதியாக முளைக்க கூடியவை.இந்த பற்கள் மேல் கீழ் என்று இரண்டு தாடை வரிசையிலும் முளைக்கும்.
இந்த பற்கள் முளைத்தால் அறிவு வளரும் என்று பிறர் சொல்லி கேட்டிருப்பீர்கள்.ஆனால் இந்த பற்கள் முளைப்பதால் எந்த ஒரு பயனும் இல்லை என்பது தான் உண்மை.
இவை முளைக்கத் தொடங்கியதும் வலி ஏற்படும்.இந்த பற்களால் ஈறுகளில் வீக்கம்,காயம் ஏற்படுதல்,சிவந்து போதல் போன்ற பாதிப்புகள் ஏற்படும்.
இந்த ஞானப்பற்களால் அருகில் இருக்க கூடிய பற்களின் ஈறுகளிலும் வலி ஏற்படத் தொடங்கிவிடும்.ஒரு முறை இந்த வீக்கம் ஏற்பட்டால் முழுமையாக குணமாக 2 அல்லது 3 நாட்களாகும்.
ஞானப்பல்லால் ஏற்படக் கூடிய வலி,வீக்கத்தை குறைப்பது எப்படி?
ஒரு கிளாஸ் வெது வெதுப்பான நீரில் தூள் உப்பு சேர்த்து வாயை கொப்பளித்து வந்தால் வலி,வீக்கம் குறையும்.
இலவங்கத்தை பொடியாக்கி நீரில் கலந்து வாயை கொப்பளித்து வந்தால் பல் ஈறு வலி,வீக்கம்,சிவந்து போதல் குணமாகும்.
ஞானப்பல்லால் ஈறு வீங்கி விட்டால் ஐஸ்கட்டி கொண்டு தாடை பகுதியில் ஒத்தடம் கொடுக்கலாம்.
வெள்ளை பூண்டை தோல் நீக்கி இடித்து அதன் சாற்றை ஞானப்பல் மீது வைத்தால் வலி,வீக்கம் ஏற்படுவது தடுக்கப்படும்.
ஞானப்பற்களால் வலி,வீக்கம் ஏற்படும் பொழுது அவை தொற்று பாதிப்புகளை ஏற்படுத்த வாய்ப்பு இருக்கிறது.இதை தடுக்க வேப்பிலையை உலர்த்தி பொடியாக்கி நீரில் கலந்து வாயை கொப்பளிக்க வேண்டும்.