பட்டை புழுவால் பாடாய் படுகிறீர்களா? இதை 50 மில்லி குடித்தால் ஒரு நிமிடத்தில் அனைத்து புழுக்களும் துடிதுடித்து இறந்து விடும்!!
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் குடற்புழு பாதிப்பால் அவதியடைந்து வருகின்றனர்.உண்ணும் உணவு,பருகுகின்ற நீர் ஆரோக்கியமானதாக இல்லை என்றால் அவை குடலில் புழுக்களை உருவாக்கி விடும்.
குடலில் புழுக்கள் இருந்தால் அவை நாம் உண்கின்ற உணவில் இருக்க கூடிய ஊட்டசத்துகளை உறிஞ்சி நம் உடலை பலவீனமாக்கி விடுகிறது.குடற்புழுக்களால் உடல் வளர்ச்சி மிகவும் பாதிக்கிறது.வயிற்று வலி,இரத்த சோகை,வாயு உள்ளிட்ட பாதிப்புகள் குடற்புழுக்களால் உண்டாகிறது.
அது மட்டுமின்றி உடல் மந்தம்,பசியின்மை,மல வாயில் நமச்சல் உள்ளிட்ட பிரச்னைகள் உண்டாகும்.பட்டை,நாடாப்புழு,வட்டப்புழு,தட்டைப்புழு என்று குடலில் பல வகை புழுக்கள் உருவாகிறது.இதில் வயிற்றில் இருக்கின்ற பட்டை புழுக்கள் முழுமையாக வெளியேற கீழே கொடுக்கப்பட்டுள்ள மூலிகை வைத்தியத்தை தொடர்ந்து பின்பற்றவும்.
கசப்பான உணவுகளை சாப்பிடுவதால் வயிற்றில் இருக்கின்ற புழுக்கள் உடனடியாக வெளியேறும்.
*வேப்பங்கொழுந்து
1/4 கப் வேப்பங்கொழுந்தை மிக்ஸி ஜாரில் போட்டு தண்ணீர் ஊற்றி ஜூஸ் போல் செய்து குடித்தால் வயிற்றில் உள்ள பட்டை புழுக்கள் உடனடியாக வெளியேறும்.
*பாகற்காய்
பிஞ்சி பாற்காயை அரைத்து சாறு எடுத்து அருந்தி வந்தால் வயிற்றில் உள்ள புழுக்கள் முழுமையாக வெளியேறும்.
*நொச்சி இலை
இவை கசப்பு தன்மை கொண்டவை.ஒன்று அல்லது இரண்டு இலை எடுத்து மிக்ஸி ஜாரில் போட்டு தண்ணீர் ஊற்றி அரைத்து குடித்தால் குடலில் நெண்டி கொண்டிருக்கும் பட்டை புழுக்கள் முழுமையாக வெளியேறும்.
*பப்பாளி இலை ஜூஸ்
தினமும் ஒரு பப்பாளி இலை ஜூஸ் குடித்து வந்தால் வயிற்றில் உள்ள அனைத்து புழுக்களும் மலம் வழியாக வெளியேறி விடும்.
*மணத்தக்காளி காய் மற்றும் கீரை
மிக்ஸி ஜாரில் ஒரு தேக்கரண்டி மணத்தக்காளி காய் மற்றும் 10 மணத்தக்காளி இலைகளை போட்டு தண்ணீர் ஊற்றி அரைத்துக் கொள்ளவும்.இதை கிளாஸிற்கு வடிகட்டி குடித்து வந்தால் வயிற்றில் உள்ள புழுக்கள் முழுமையாக வெளியேறி விடும்.