REMAL Puyal: தென்மேற்கு வங்க கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழ் இடத்தில் சுழற்சி நிலவி வருவதாகவும், இதனால் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என்றும், இது வடகிழக்கு திசையில் நகர்ந்து வரும் 24-ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்திருந்தது.
இந்நிலையில் வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்து வரும் 25-ஆம் தேதி காலையில் புயலாக உருவாகும். இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை காற்று தாழ்வு மண்டலமாக வலுவடைந்து மே 25-ஆம் தேதி புயலாக வடமேற்கு வங்கக்கடலில் நிலைக்கொள்ளும் என்றும் வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
மேலும் புயல் உருவாகும் பட்சத்தில் ஓமன் நாடு பரிந்துரைத்த REMAL என்னும் பெயர் புயலுக்கு வைக்கப்படுவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும் படிக்க: ஜெயலலிதா அம்மா எனக்கு எப்போதும் டாடா சொல்லுவாங்க..!! திமிரு பட நடிகை ஈஸ்வரி..!!