கோயில் பூஜையில் ஆட்டு ரத்தம் குடித்த நபர் உயிரிழப்பு..!!

0
138
gobichettipalayam

சித்திரை மாதம் தொடங்கிவிட்டால் போதும் பூஜைகள் நடப்பது வழக்கம். அப்படி பூஜை நடக்கும் கோயில்களில் ஆடு வெட்டுவது, கரகம் எடுப்பது, தீ மிதியல் என பல விழாக்கள் விஷேசமாக நடத்தப்படும். இந்நிலையில் தான் கோபிசெட்டிபாளையம் (gobichettipalayam) அருகே நடந்த கோயில் பூஜையில் பூசாரி வெட்டப்பட்ட ஆட்டின் ரத்தத்தை வாழைப்பழத்துடன் சாப்பிட்டு சிறிது நேரத்தில் எல்லாம் உயிரிழந்து இருக்கிறார்.

கோபிசெட்டிபாளையம் நல்லகவுண்டன்பாளையம் பாலாஜி நகரை சேர்ந்தவர் தான் பழனிசாமி. இவருக்கு வயது 45 ஆகிறது. இவருக்கு திருமணமாகி தேவி என்ற மனைவியும், இரு மகன்கள் உள்ளனர். இவர் வேன் டிரைவராக வேலை பார்த்து வந்துள்ளார்.

இந்நிலையில் கோபிசெட்டிபாளையத்தில் உள்ள அண்ணமார் கோயிலில் (Kovilpalayam Annamar Kovil) ஆண்டு தோறும் மே மாதத்தில் பூஜைகள் நடத்துவது வழக்கம். இந்நிலையில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்ற நிலையில் பரண் கிடாய் பூஜை நடைபெறுவது வழக்கம். இதற்காக பூசாரிகள் காப்பு கட்டி கலந்து கொள்வார்கள். இந்த பரண் கிடாய் பூஜையில் 20-க்கும் மேற்பட்ட ஆடுகள் வெட்டப்பட்டு அந்த ரத்தத்தை வாழைப்பழத்துடன் பிசைந்து குழந்தை இல்லாதவர்கள், நேர்த்திக் கடன் செய்பவர்கள், நோய் தீர வேண்டி வந்தவர்களுக்கு வழங்குவார்கள்.

இதில் பழனிசாமியும் கலந்துக்கொண்டு வெட்டிய ஆட்டின் இரத்தத்துடன் கலந்த வாழைப்பழத்தை சாப்பிட்டுள்ளார். சிறிது நேரத்தில் மயங்கி விழுந்த அவரை அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டார் என தெரிவித்துள்ளனர். உடற் கூறு ஆய்விற்காக அவரின் உடல் கொண்டு செல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. மேலும் இது குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் படிக்க: மன்னிப்பு கோரினார் யூடியூபர் இர்பான்!! மன்னிப்பு வீடியோ வெளியிடுவதாக அறிவிப்பு..!!