அடேங்கப்பா பால் மற்றும் டீயில் உப்பு போட்டு குடித்தால் உடலுக்கு இவ்வளவு நல்லதா?
தினமும் காலை நேரத்தை ஒரு கப் பால்,டீ அல்லது காபியுடன் தொடங்கும் பழக்கம் பலரிடம் உள்ளது.அதிலும் டீ,காபி குடிக்காத நபர்கள் இன்றைய உலகில் மிகவும் குறைவு என்று தான் சொல்ல வேண்டும்.
ஒருவேளை உணவு கூட சாப்பிடாமல் இருப்பேன்.ஆனால் டீ குடிக்காமல் மட்டும் என்னால் இருக்க முடியாது என்று பிறர் சொல்ல கேட்டிருப்பீர்கள்.அந்தளவிற்கு அனைவரும் டீக்கு அடிமையாகி வருகிறார்கள்.
பாலில் தேயிலை தூள்,சர்க்கரை சேர்த்து கொதிக்க வைக்கும் பானத்தை டீ என்று அழைக்கிறோம்.இந்த பானத்தில் சிட்டிகை அளவு உப்பு சேர்த்து குடித்தால் உடலுக்கு பல ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கும்.அதேபோல் பால் அருந்தும் நபர்கள் சிறிது உப்பு சேர்த்து அருந்தி வந்தால் உடல் ஆரோக்கியம் மேம்படும்.ஆனால் அதிகம் உப்பு சேர்க்கக் கூடாது.சிட்டிகை அளவு சேர்த்தால் போதுமானது.
காலை நேரத்தில் பால் அல்லது டீயில் உப்பு சேர்த்து குடித்து வந்தால் செரிமான மண்டலம் சீராக இயங்கும்.செரிமான பிரச்சனை ஏற்படாமல் இருக்கும்.
உடலிலுள்ள நீர் வியர்வை,சிறுநீர் வழியாக வெளியேறுகிறது.எனவே உடலில் நீரேற்றம் ஏற்படுவது கட்டுப்பட தினமும் உப்பு சேர்த்த டீ அல்லது பால் குடித்து வரலாம்.
ஒற்றை தலைவலி பிரச்சனை இருப்பவர்கள் தினமும் உப்பு சேர்த்த டீ குடித்து வரலாம்.உடலில் உள்ள ஆற்றல் குறையாமல் இருக்க தினமும் உப்பு சேர்த்த டீ குடிக்கலாம்.
மலச்சிக்கல் பாதிப்பு இருப்பவர்களுக்கு உப்பு சேர்த்த டீ நல்ல தீர்வாக இருக்கும்.இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த இந்த பானம்’பெரியளவில் உதவுகிறது.