கை கழுவாமல் சாப்பிட்டால் இந்த நோய்கள் எல்லாம் அழையா விருந்தாளிகளாக உடலில் நுழைந்து விடும்!!
ஆரோக்கியமாக வாழ வேண்டும் என்றால் நம் உடலின் வெளிப்புறம் மற்றும் உட்புறத்தை தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும்.இதில் கை கழுவும் பழக்கம் அடிப்படையாகும்.தினமும் உணவு உட்கொண்ட பின்னர்,கழிவறைக்கு சென்று வந்த பின்னர்,வெளியில் சென்று வந்த பின்னர் கைகளை கழுவ வேண்டும்.
ஆனால் உங்களில் பலர் கைகளை சுத்தம் செய்த சலித்துக் கொண்டு நேரடியாக உணவு உட்கொள்ள தொடங்கி விடுகின்றனர்.சிலர் கடமைக்கு கைகளை சுத்தம் செய்வார்கள்.இதனால் நீங்கள் பல ஆரோக்கிய பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.
கைகளை சுத்தம் செய்ய தவறினால் உடலுக்கு என்ன மாதிரியான பாதிப்புகள் ஏற்படும்?
கைகளை கழுவி சுத்தப்படுத்தாமல் உணவு உட்கொண்டால் கைகளில் உள்ள நுண்கிருமிகள் நேரடியாக உடலுக்கு சென்று விடும்.இதனால் அடிக்கடி உடல்நலக் கோளாறு ஏற்படும்.
கைகளை முறையாக கழுவாவிட்டால் சுவாசக் கோளாறு பாதிப்பு ஏற்படும்.கைகளில் தேங்கிய அழுக்கு,கிருமிகள் உடலுக்குள் சென்றால் வயிற்றுப்போக்கு பாதிப்பு ஏற்படும்.
தொடர்ந்து கை கழுவாமல் சாப்பிட்டு வந்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி முழுமையாக குறைந்து விடும்.
கைகளில் உள்ள அழுக்குகள் நேரடியாக உடலிற்குள் சென்றால் அவை குடலின் ஆரோக்கியத்தை பாதித்து விடும்.
கை கழுவாமல் சாப்பிட்டால் குடலில் பாக்டீரியா,புழுக்கள் உருவாகி கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும்.
கைகளை சுத்தம் செய்வது எப்படி?
சோப் போன்ற கெமிக்கல் பொருட்களை பயன்படுத்தி கைகளை சுத்தம் செய்வதை தவிர்க்கவும்.
வெது வெதுப்பான நீரில் கைகளை கழுவி சுத்தம் செய்ய வேண்டும்.கை இடுக்கு,நகங்களில் அழுக்கு இல்லாதவாறு தேய்த்து கழுவ வேண்டும்.பின்னர் சுத்தமான காட்டன் துணியில் கைகளை துடைத்து விட்டு உணவருந்த வேண்டும்.