ஒரே பட்டன் தான் உங்கள் குழந்தைகளின் மதிப்பெண்ணை நீங்களே அறிந்துக் கொள்ளலாம்!! பள்ளிக்கல்வித்துறையின் புதிய அப்டேட்!!
ஆசிரியர் மட்றும் மாணவர்களின் அன்றாட தரவுகளை பதிவு செய்யும் பொருட்டு கல்வித்துறையானது எமிஸ் இணையத்தளம் என ஒன்றை அறிமுகப்படுத்தியது.இதில் ஆசிரியர்கள் முதல் மாணவர்களின் வருகை பதிவேடு எனத்தொடங்கி பாடத்திட்டம் வரை அனைத்தும் வரையறுக்கப்பட்டுள்ளது.மேற்கொண்டு ஆசிரியர்கள் கலந்தாய்-வுக்கும் இந்த இணையதளம் மிகவும் பயனுள்ளதாக இருந்தது.
தற்பொழுது ஆசிரியர் கல்வி இயக்குனரகம் என அனைத்தையும் கடந்து இந்த இணையத்தளமானது பெற்றோர்கள் மத்தியில் வந்துள்ளது. அதாவது இனி இந்த இனையத்தளம் மூலம் பெற்றோர்களுக்கு தங்களது குழந்தைகளின் வருகை பதிவேடு, தேர்வில் எடுத்த மதிப்பெண் என அனைத்தும் தெரிந்து கொள்ளும் வகையில் குறுஞ்செய்தி அனுப்பும் எளிய முறையை கொண்டுவந்துள்ளனர்.
இனி வரும் காலங்களில் பெற்றோர்கள் அடிக்கடி பள்ளிக்கு செல்ல அவசியமிருக்காது.அதற்கு மாறாக இதன் வாயிலாக தங்களது குழந்தையின் படிப்புகளை பற்றிய தகவல்களை அறிந்துக்கொள்ள முடியும்.அதுமட்டுமின்றி பெற்றோர்கள் இதனை அறிய கட்டாயம் ஆண்ட்ராய்டு செல்போன் வைத்திருப்பது கட்டாயம் என கூறியுள்ளனர். மேற்கொண்டு இந்த தகவலானது வாட்ஸ் ஆப் மூலம் அனுப்ப உள்ளதால் இதனை உபயோக்கி தெரிந்திருக்க வேண்டுமென்றும் கூறியுள்ளனர்.
சமீபகாலமாக கல்வித்துறை தனது சார்ந்த தேவைகளை டிஜிட்டல் மயமாக்கி வருகிறது. இதனால் தரவுகள் ஏதும் அழிய வாய்ப்பே இல்லை என்பதுடன் அதனை மாற்றவும் இயலாது. அதுமட்டுமின்றி அதிலுள்ள அனைத்தும் வெளிப்படை தன்மையுடன் இருப்பதால் உயர் நிர்வாகிகள் கண்காணிப்பிற்கு மிகவும் எளிமையாக உள்ளது. இது ஆசிரியர்களை தாண்டி தற்பொழுது பெற்றோர்களுக்கும் பயன்படும் வகையில் இருந்தாலும் பெரும்பாலான வீடுகளில் ஆண்ட்ராய்டு செல்போன் இல்லாத நிலை தற்பொழுது வரை நீடிக்கத்தான் செய்கிறது.