இந்த திட்டத்தில் அப்பளை செய்தவர்களுக்கு கலைஞர் கனவு இல்லம் திட்டம் செல்லாது!! வந்தது புதிய ரூல்ஸ்!!
தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் பல்வேறு அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டது.அதில் ஒன்று தான் இந்த கலைஞரின் கனவு இல்லம் திட்டம்.இந்த அறிக்கை ஒப்புதல் பெற்று இதற்கான அரசாணையையும் வெளியிட்டனர். அதில் எந்தெந்த நபர்களுக்கு இத்திட்டம் பொருந்தும் உள்ளிட்டவற்றை தெரிவித்திருந்தனர்.தற்பொழுது அதன் வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.அதன்படி,
குடிசை வீட்டில் வசிப்பவர்களை மையப்படுத்தி உருவாக்கிய திட்டம் என்பதால் அவர்களுக்கு ஆர்.சி.சி கூரையுடன் வீடு அமைத்து தருவதோடு ஓலை பயன்படுத்தக்கூடாது என்று தடை விதித்துள்ளனர்.அதுமட்டுமின்றி ஆஸ்பெஸ்டாலும் அமைக்க கூடாது என்று கூறியுள்ளனர்.வீட்டின் சுவர்களை செங்கல் அல்லது இன்டர் லாக் கற்களை கொண்டு கட்ட வேண்டுமென்றும் மேற்கொண்டு 3.50 ஆயிரமாக ஒரு வீட்டின் சம்மந்தப்பட்ட அனைத்தும் இருக்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.
அதுமட்டுமின்றி இந்த மாதம் இறுதிக்குள் இந்த திட்டத்தின் மூலம் அதாவது கேவிவிடி சர்வே எனத்தொடங்கி புதிய குடிசை வாழ் நபர்கள் இணைத்த அனைத்து தரவுகளையும் இனையத்தில் பதிவு செய்ய வேண்டுமென்று உத்தரவிட்டுள்ளனர்.அதுமட்டுமின்றி அந்தந்த வார்டு உறுப்பினர்,வட்டார பொறியாளர்,கிராம ஊராட்சி உதவி பொறியாளர் என அனைவரும் இந்த திட்டத்திற்கு தகுதி வாய்ந்தவர்களை தேர்வு செய்ய வேண்டும்.
அதேபோல பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் யாரேனும் பதிவு செய்து ஒப்புதலுக்காக காத்திருந்தால் அவர்களுக்கு இந்த திட்டம் பொருந்தாது என கூறியுள்ளனர். அதேபோல பிரதமரின் திட்டத்தின் கீழ் நிலுவையில் இருந்தாலும் இந்த திட்டம் செல்லாது என தெரிவித்துள்ளனர்.