MEAL MAKER SIDE EFFECTS: நீங்கள் மீல் மேக்கர் பிரியர் என்றால் இதை அவசியம் தெரிந்து கொள்ளுங்கள்!!
இன்றைய நவீன காலகட்டத்தில் உணவுமுறையில் பல மாற்றங்கள் வந்துவிட்டது.நாம் சாப்பிடக் கூடிய பெரும்பாலான உணவுகள் உடலுக்கு கேடு விளைவிக்க கூடியவையாக இருக்கிறது.
உணவகங்களில் கிடைக்க கூடிய துரித உணவுகளுக்கு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் அடிமையாகும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.அதுவும் பிராய்லர் இறைச்சி சுவையை ஒத்திருக்கும் மீல் மேக்கரை சைவ பிரியர்களுக்கு விரும்பி உண்கின்றனர்.
இதில் பிரியாணி,சில்லி,வறுவல்,பிரைடு ரைஸ்,குழம்பு,கிரேவி என்று பல ருசியான உணவுகள் செய்யப்படுகிறது.மேல் மேக்கரில் அதிகளவு புரத சத்துக்கள் அடங்கியுள்ளது.இவை சோயா வேஸ்ட்டில் இருந்து தயாரிக்க கூடிய ஒரு பொருளாகும்.
சோயாவில் என்ன சத்துக்கள் இருக்கிறதோ அவை அனைத்தும் மேல் மேக்கரில் கிடைக்கும்.புரத சத்து குறைபாடு இருபவர்களுக்கு மீல் மேக்கர் சிறந்த உணவாகும்.ஆனால் இதனை அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால் உடலில் பல பாதிப்புகள் ஏற்படும்.குறிப்பாக ஆண்களுக்கு பல இவை கெடுதல் ஏற்படுத்தக் கூடியவை ஆகும்.
மீல் மேக்கர் சாப்பிடுவதால் ஏற்படும் தீமைகள்:
1)ஆண்களுக்கு உடலில் ஹார்மோன் மாற்றங்களை ஏற்படுத்தி மலட்டு தன்மையை உண்டு பண்ணும் .
2)குழந்தைகள் மீல் மேக்கரை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் ஊட்டச்சத்து குறைபாடு பிரச்சனையை சந்திப்பார்கள்.
3)இவை ஒவ்வாமை,செரிமான பிரச்சனையை உருவாகக் கூடியது.செரிமான மண்டலம் சீராக இயங்கவில்லை என்றால் மலச்சிக்கல் பாதிப்பு ஏற்படும்.
4)மீல் மேக்கரில் இருக்கின்ற பைட்டோ ஈஸ்டிரோஜன் சிறுநீரகத்தின் ஆரோக்கியத்தை பாதிக்கிறது.
5)தாய் கொடுப்பவர்கள் மீல் மேக்கரை அவசியம் தவிர்க்க வேண்டும்.ஒரு சிலருக்கு சரும பிரச்சனை வருவதற்கு வாய்ப்பிருக்கிறது.