நாள் முழுவதும் எனர்ஜிட்டிக்கா இருக்க வேண்டுமா? அப்போ இதை ஒரு கிளாஸ் குடியுங்கள்!!
காலையில் இருந்து இரவு தூங்கச் செல்வதற்கு முன்னர் வரை உடலை சுறுசுறுப்பாக வைத்துக் கொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள வீட்டு வைத்தியத்தை பின்பற்றவும்.
தேவையான பொருட்கள்:-
1)மிளகு
2)வெல்லம்
3)நெய்
செய்முறை:-
அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி சூடாக்கவும்.பிறகு 2 அல்லது 3 மிளகை இடித்து அதில் சேர்க்கவும்.இதை ஒரு நிமிடம் கொதிக்க விட்டு அடுப்பை அணைக்கவும்.
பிறகு இதை ஒரு கிளாஸிற்கு வடிகட்டி சிறிது நெய் சேர்த்து குடித்தால் அந்த நாள் முழுவதும் உடல் சுறுசுறுப்பாக இயங்கும்.
தேவையான பொருட்கள்:-
1)ஆவாரம் பூ
2)முருங்கை கீரை
செய்முறை:-
அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து ஒரு கப் தண்ணீர் ஊற்றி சூடாக்கவும்.பிறகு அதில் 3 தேக்கரண்டி ஆவாரம் பூ மற்றும் 3 தேக்கரண்டி முருங்கை கீரை சேர்த்து மிதமான தீயில் தண்ணீர் நிறம் மாறி சுண்டும் வரை கொதிக்க விடவும்.
பிறகு இதை ஒரு கிளாஸிற்கு வடிகட்டி காலை நேரத்தில் குடித்து வந்தால் அந்த நாள் முழுவதும் உடல் சுறுசுறுப்பாக இயங்கும்.
தேவையான பொருட்கள்:-
1)பால்
2)பாதாம் பருப்பு
செய்முறை:-
அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து 3 அல்லது 4 பாதாம் பருப்பை போட்டு மிதமான தீயில் வறுத்துக் கொள்ளவும்.
பின்னர் இதை ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு மைய்ய அரைக்கவும்.அதன் பின்னர் அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் பால் ஊற்றி சூடாக்கவும்.இந்த பாலில் அரைத்த பாதாம் பவுடரை போட்டு ஒரு நிமிடம் கொதிக்க விட்டு அடுப்பை அணைக்கவும்.
இந்த பாலை ஒரு கிளாஸிற்கு வடிகட்டி குடித்தால் எனர்ஜிட்டிக்கா வேலை’செய்ய முடியும்.
தேவையான பொருட்கள்:-
1)இலவங்கப்பட்டை
2)தேன்
செய்முறை:-
அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி சூடாக்கவும்.பிறகு அதில் ஒரு துண்டு இலவங்கப்பட்டை சேர்த்து மிதமான தீயில் கொதிக்க விடவும்.
இந்த நீரை ஒரு கிளாஸிற்கு வடிகட்டி சிறிது தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் உடலுக்கு நல்ல எனர்ஜி கிடைக்கும்.