Herbal Hair Oil: இளநரை செம்பட்டை பொடுகு முடி கொட்டல்.. அனைத்து பிரச்சனைகளுக்கும் ஒரே எண்ணையில் தீர்வு வேண்டுமா?
நம் எல்லோருக்கும் தலை முடி பிரச்சனை இருக்கிறது.நாம் உண்ணும் உணவை வைத்து நம் உடல் ஆரோக்கியத்தை பற்றி தெரிந்து கொள்ள முடியும் என்பது போல் நம் தலை முடிகளை பராமரிக்கும் விதத்தை வைத்து அவற்றின் தரத்தை தெரிந்து கொள்ள முடியும்.
தலை முடியை ஆரோக்கியமான முறையில் பராமரித்து வந்தால் இளநரை,முடி உதிர்தல்,பொடுகு,செம்பட்டை முடி உள்ளிட்ட பிரச்சனைகளை தடுக்க முடியும்.அந்த வகையில் தலை முடி சார்ந்த அனைத்து வித பிரச்சனைகளையும் சரி செய்யக் கூடிய மூலிகை எண்ணெய் தயாரிப்பது குறித்து விளக்கப்பட்டுள்ளது.
கூந்தல் ஆயில் தயாரிக்க தேவைப்படும் பொருட்கள்:
1)வெந்தயம்
2)கருஞ்சீரகம்
3)விளக்கெண்ணெய்
4)கடுகு எண்ணெய்
5)கறிவேப்பிலை
6)பாதாம் எண்ணெய்
7)செம்பருத்தி இதழ்
8)தேங்காய் எண்ணெய்
செய்முறை:
அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து ஒரு தேக்கரண்டி வெந்தயம்,ஒரு தேக்கரண்டி கருஞ்சீரகம் சேர்த்து மிதமான தீயில் வறுத்துக் கொள்ளவும்.
பிறகு இதை மிக்ஸி ஜாரில் போட்டு பொடித்துக் கொள்ளவும்.அதன் பின்னர் ஒரு கப் உலர்ந்த செம்பருத்தி இதழ் மற்றும் ஒரு கைப்பிடி அளவு உலர்ந்த கறிவேப்பிலை எடுத்து மிக்ஸி ஜாரில் போட்டு பவுடராக்கி கொள்ளவும்.
பின்னர் அடுப்பில் ஒரு வாணலி வைத்து 100 மில்லி விளக்கெண்ணெய்,100 மில்லி தேங்காய் எண்ணெய்,50 மில்லி கடுகு எண்ணெய் மற்றும் 50 மில்லி பாதாம் எண்ணெய் ஊற்றி மிதமான தீயில் இரண்டு நிமிடங்களுக்கு சூடாக்கவும்.
பிறகு அரைத்த வெந்தயம் மற்றும் கருஞ்சீரகப் பொடியை போட்டு கலந்து விடவும்.அதன் பின்னர் செம்பருத்தி இதழ் மற்றும் கறிவேப்பிலை பொடியை போட்டு 10 நிமிடங்களுக்கு மிதமான தீயில் காய்ச்சவும்.
இந்த எண்ணெயை நன்கு ஆறவிட்டு ஒரு டப்பாவிற்கு வடிகட்டி கொள்ளவும்.இதை தினமும் முடிகளின் வேர் பகுதியில் படும்படி தடவி வந்தால் இளநரை,செம்பட்டை முடி,பொடுகு,முடி உதிர்தல் உள்ளிட்ட அனைத்து பாதிப்புகளுக்கும் தீர்வு கிடைக்கும்.