Knee Pain: இந்த ஆயிலை தடவிய நொடியில் முழங்கால் வலி பறந்து போய்விடும்!! நம்புங்கள் நிச்சயம் பலன் கிடைக்கும்!!
பெரும்பாலான மக்கள் சந்திக்கும் பொதுவான பாதிப்பாக முழங்கால் வலி உள்ளது.இவை உடல் பருமனாக இருபவர்கள்,கால்களுக்கு ஓய்வு கொடுக்காமல் இருப்பவர்களுக்கு வருவதற்கு வாய்ப்புகள் அதிகம்.மூட்டு பகுதியில் வலி,வீக்கம்,சூடான உணர்வு,மூட்டு சிவந்து போதல் ஆகியவை முழங்கால் வலிக்கான அறிகுறிகள் ஆகும்.
வலுவான பொருட்களை தூக்குதல்,வயது முதுமை உள்ளிட்ட காரணங்களாலும் இந்த முழங்கால் வலி ஏற்படுகிறது.இதனை மருந்து,மாத்திரை மற்றும் அறுவை சிகிச்சையின்றி எளிதில் குணமாக்கி கொள்ளும் வழிமுறைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் முழங்கால் வலியை குணமாக்க மூலிகை எண்ணெய்கள் அதிகம் பயன்படுத்தப்பட்டு வருகிறது.அதன்படி முழங்கால் வலியை போக்கும் எண்ணெய்கள் இதோ.
தேவையான பொருட்கள்:-
1)பூண்டு
2)கடுகு எண்ணெய்
அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து 250 மில்லி கடுகு எண்ணெய் ஊற்றி சூடாக்கவும்.பின்னர் அதில் 2 பல் பூண்டை இடித்து போட்டு காய்ச்சவும்.இந்த எண்ணெயை ஆறவிட்டு முழங்கால் வலி உள்ள இடத்தில் தடவி வந்தால் அவை சில தினங்களில் குணமாகி விடும்.
தேவையான பொருட்கள்:-
1)மஞ்சள்
2)தேங்காய் எண்ணெய்
அடுப்பில் ஒரு வாணலி வைத்து 100 மில்லி தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடாக்கவும்.பிறகு அதில் ஒரு தேக்கரண்டி மஞ்சள் சேர்த்து காய்ச்சி அடுப்பை அணைக்கவும்.இந்த எண்ணெயை முழங்கால் மீது அப்ளை செய்து வந்தால் வலி,வீக்கம் முழுமையாக குணமாகும்.
தேவையான பொருட்கள்:-
1)கிராம்பு
2)தேங்காய் எண்ணெய்
அடுப்பில் ஒரு வாணலி வைத்து 150 மில்லி தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடாக்கவும்.பிறகு அதில் ஐந்து கிராம்பு சேர்த்து காய்ச்சி அடுப்பை அணைக்கவும்.இந்த எண்ணெயை முழங்கால் மீது அப்ளை செய்து வந்தால் வலி,வீக்கம் முழுமையாக குணமாகும்.
தேவையான பொருட்கள்:-
1)நல்லெண்ணெய்
அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து ஒரு தேக்கரண்டி கருப்பு எள் போட்டு வறுத்துக் கொள்ளவும்.பின்னர் இதை மிக்ஸி ஜாரில் போட்டு பவுடர் பதத்திற்கு அரைக்கவும்.பிறகு அடுப்பில் ஒரு வாணலி வைத்து 150 மில்லி நல்லெண்ணெய் ஊற்றி கருப்பு எள் பொடியை போட்டு கொதிக்க விட்டு அடுப்பை அணைக்கவும்.
இந்த எண்ணெயை நன்கு ஆறவிட்டு ஒரு டப்பாவிற்கு வடிகட்டி கொள்ளவும்.இந்த எண்ணெயை முழங்கால் மீது அப்ளை செய்து வந்தால் வலி,வீக்கம் முழுமையாக குணமாகும்.