Vaginal Boils: பெண்ணுறுப்பிலும் பருக்கள் உள்ளதா? இவ்வாறு செய்தால் அவை ஒரே நாளில் மறைந்து விடும்!!
பெண்களே உங்கள் பிறப்புறுப்பில் அழுக்கு,எண்ணெய் பிசுக்கு இருந்தால் அவ்விடத்தில் கொப்பளங்கள் உருவாகும்.இவை முகத்தில் உள்ள சீழ் பருக்கள் போல் இருக்கும்.ஹார்மோன் மாற்றம்,இறுக்கமான உடைகள்,பெண்ணுறுப்பை சுத்தமாக வைத்துக் கொள்ளாமல் இருத்தல் போன்ற காரணங்களால் இவ்வாறான பருக்கள் உண்டாகிறது.
சரும பிரச்சனை,பிறப்புறுப்பில் இருக்கின்ற முடிகளை அகற்றுதல் போன்ற காரணங்களால் இந்த பருக்கள் உருவாகிறது.எனவே தளர்வான உள்ளாடைகள் அணிதல்,பிறப்புறுப்பை சுத்தமாக வைத்துக் கொள்ளுதல் போன்றவற்றை செய்து சீழ் கொப்பளம் வராதவாறு பார்த்துக் கொள்ளுங்கள்.
மேலும் பெண்ணுறுப்பில் இருக்கின்ற சீழ் கொப்பளங்கள் குணமாக கீழே கொடுக்கப்பட்டுள்ள வீட்டு வைத்தியத்தை ஒரு வாரத்திற்கு முயற்சித்து வரவும்.
1)பெட்ரோலியம் ஜெல்
பிறப்புறுப்பில் உள்ள சருமத்தின் மீது பெட்ரோலியம் ஜெல் அப்ளை செய்து வந்தால் உள்ளாடைகளின் உராய்வால் ஏற்படும் பருக்கள் குணமாகும்.
2)ஹாட் வாட்டர்
ஒரு கப் ஹாட் வாட்டரில் 1 கப் கூல் வாட்டர் சேர்த்து பிறப்புறுப்பில் உள்ள கொப்பளங்களை சுத்தம் செய்து வந்தால் அவை சில தினங்களில் குணமாகி விடும்.
3)கற்றாழை ஜெல் + மஞ்சள்
ஒரு கிண்ணத்தில் பிரஸ் கற்றாழை ஜெல் ஒரு தேக்கரண்டி மஞ்சள் தூள் 1/4 தேக்கரண்டி அளவு சேர்த்து நன்கு மிக்ஸ் செய்யவும்.இதை பிறப்புறுப்பில் உள்ள கொப்பளங்கள் மீது பூசி குளித்து வந்தால் அவை சில தினங்களில் மறைந்து விடும்.
4)வேப்பிலை சாறு
2 கொத்து வேப்பிலையை மிக்ஸி ஜாரில் போட்டு சிறிது தண்ணீர் ஊற்றி மைய்ய அரைக்கவும்.பிறகு இதை ஒரு கிண்ணத்திற்கு வடிகட்டி பிறப்புறுப்பில் உள்ள கொப்பளங்கள் மீது பூசி குளித்து வந்தால் அவை சில தினங்களில் மறைந்து விடும்.