கோடிக் கணக்கில் கொட்டும் தயாரிப்பாளரிடமும் இயக்குநரிடம் அந்த விஷயத்திற்கு NO சொல்ல முடியாது – ஸ்ருதிஹாசன் ஓபன் டாக்!!

0
237
Even a producer who is pouring crores of rupees can't say NO to the director - Shruti Haasan Open Talk!!
Even a producer who is pouring crores of rupees can't say NO to the director - Shruti Haasan Open Talk!!

கோடிக் கணக்கில் கொட்டும் தயாரிப்பாளரிடமும் இயக்குநரிடம் அந்த விஷயத்திற்கு NO சொல்ல முடியாது – ஸ்ருதிஹாசன் ஓபன் டாக்!!

கோலிவுட்டின் மாஸ் ஹீரோவாக திகழும் கமல்ஹாசன் அவர்களின் மூத்த மகள் ஸ்ருதிஹாசன் தமிழ்,தெலுங்கு ஆகிய மொழிகளில் பல படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.2011 ஆம் ஆண்டு வெளியான ஏழாம் அறிவு படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு கதாநாயகியாக அறிமுகமான இவர் ஓ மை ஃப்ரண்ட்,3,பூஜை,புலி,வேதாளம்,சிங்கம் 3 உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானார்.

ஸ்ருதிஹாசன் நடிப்பை தாண்டி சிறந்த பாடகியாகவும் திகழ்கிறார்.தற்பொழுது பாலிவுட் படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.மும்பையைச் சேர்ந்த பிரபல ஓவியருடன் காதல் உறவில் இருந்து வந்த ஸ்ருதிஹாசன் அண்மையில் அவரை ப்ரேக் அப் செய்தார்.

ஸ்ருதிஹாசன் அவர்கள் பிரபல இயக்குநர் லோகேஷ் கனகராஜ் உடன் நெருக்கம் காட்டியதே
இவர்களின் காதல் முறிவிற்கு காரணம் என்று சொல்லப்படுகிறது.இந்நிலையில் அண்மையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட ஸ்ருதி தான் ஒரு அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறேன் என்று வெளிப்படையாக தெரிவித்திருக்கிறார்.

PCOS என்ற முறையற்ற மாதவிடாய் பிரச்சனையால் அவதிப்பட்டு வருவதாகவும் இந்த பாதிப்பால் என் தனிப்பட்ட வாழவில் பல விஷயங்களை இழந்திருக்கிறேன் என்றும் கூறியிருக்கிறார்.

மேலும் தன்னை நம்பி கோடிக்கணக்கில் பணத்தை போட்டு படம் எடுக்கும் தயாரிப்பாளரிடமும், இயக்குநரிடமும் என் PCOS பிரச்சனையை சொல்லி அந்த நாட்களில் மட்டும் படப்பிடிப்பை தள்ளி வைக்க முடியுமா என்று கேட்க முடியாது.என்னுடைய வலிகள் அனைத்துயும் பொறுத்துக் கொண்டு தான் ஆக்‌ஷன் காட்சிகளிலும்,நடனம் காட்சிகளிலும் நடிக்கின்றேன் என்று வேதனையுடன் ஸ்ருதிஹாசன் தெரிவித்திருக்கிறார்.

இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் தீயாய் பரவி வரும் நிலையில் ஸ்ருதிஹாசன் அவரது ரசிகர்கள் ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.

Previous articleGARUDAN: சூரியின் “கருடன்” வசூலில் வென்றதா? பாக்ஸ் ஆபிஸ் நிலவரம் இதோ!!
Next articleNEET EXAM 2024: 720/720 மதிப்பெண் பெற்று நான்கு தமிழக மாணவர்கள் சாதனை!!