சீனியர் சிட்டிசனுக்கு வந்த புதிய உத்தரவு!! ஆதாருடன் இது கட்டாயம் இல்லையென்றால் உதவித்தொகை ரத்து!!
சமீப காலமாக ஆதாருடன் போன் நம்பரை விரைவில் இணைக்கவேண்டும் என்றும், அப்படி இணைக்காவிட்டால் முதியோர்களுக்கு வழங்கப்பட்டு வரும் உதவித்தொகை நிறுத்தப்படும் என்று தகவல்கள் வெளியாகியது. இதன் காரணமாக இ-சேவை மையங்களில் மக்கள் கூட்டம் அதிகரித்தது. அதிலும் குறிப்பாக திருத்தணி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இந்த தகவலால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
வயதான காலத்தில் உடல்நிலை காரணமாக உழைத்து வருவாய் ஈட்ட முடியாத முதியவர்களுக்கு உதவும் வகையில் உருவாக்கப்பட்ட திட்டம் தான் இந்த தமிழ்நாடு அரசு முதியோர் உதவித்திட்டம். இந்த திட்டத்தின் மூலம் பல முதியவர்கள் இன்றளவும் பயனடைந்து வருகின்றனர். இத்திட்டமானது கடந்த 1.4.1962 முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் மாதல் ரூ. 1,200 வழங்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் தான் கடந்த மாதம் இந்த திட்டத்தின் மூலம் பயன்பெறும் முதியோர்களின் தரவுகளை சரிபார்க்கும் பொழுது அதில் பலரது செல்போன் எண்கள் செயழிலந்து இருப்பது தெரிய வந்துள்ளது. இதன் காரணமாக இந்த திட்டத்தின் மூலம் பயன்பெறும் அனைவரும் தங்கள் ஆதார் எண்ணுடன் செல்போன் எண்ணை இணைக்கவேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. ஆனால் இதற்கு காலக்கெடு என்று எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இந்த வருடத்திற்குள் ஆதார் எண்ணுடன் செல்போன் எண்னை இணைக்க வேண்டும் என்று கூறப்பட்டது.
இதன் காரணமாக திருவள்ளூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் தமிழ்நாடு முதியோர் உதவித்தொகை திட்டத்தின் கீழ் பயன்பெறும் அனைவரும் தங்கள் ஆதார் எண்ணுடன் மொபைல் எண்ணை இணைக்கவேண்டும் என்றும் இதற்கு எந்த காலக்கெடு என்று எதுவும் இல்லை இந்த வருடம் முழுவதும் இதனை செய்யலாம் என்றும் அறிவிக்கப்பட்டது. ஆனால் இதனை சிலர் இந்த மாதத்திற்குள் ஆதார் எண்ணை செல்போன் எண்ணுடன் இணைக்காவிட்டால் முதியோர் உதவித்தொகை வழங்குவது நிறுத்தப்படும் என்று தவறான தகவலை பரப்பியுள்ளனர்.
இதனை நம்பி பல முதியோர் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள திருத்தணி நகராட்சி மற்றும் தாலுகா அலுவலகம் ஆகிய பகுதிகளில் உள்ள இ-சேவை மையங்களில் குவிந்தனர். ஒரே நேரத்தில் அதிக அளவிலான முதியவர்கள் அலுவலகத்தில் திரண்டதால் அதிகாரிகள் அவர்களை கட்டுப்படுத்த முடியாமல் திணறினர்.
இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அதிகாரிகள் அவர்களிடம் சென்று ஆதார் எண்ணுடன் செல்போன் எண்ணை இணைக்கவேண்டும் என்பது உண்மைதான். ஆனால் அதற்கு எந்த விதமான காலகெடுவும் வழங்கப்படவில்லை. ஒரு வருடத்திற்குள் இணைத்தாலே போதுமானது என்று கூறினர். மேலும் இதுபோன்ற வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் அவர்கள் வழியுறுத்தியுள்ளனர்.