அண்மையில் நடைபெற்ற லோக்சபா தேர்தலில் பாஜக வெற்றி பெற்றது. எனவே அக்கட்சியின் தலைவரான நரேந்திர மோடி 30 கேபினட் அமைச்சர்களுடன் மூன்றாவது முறையாக இந்திய நாட்டின் பிரதமராக நேற்று பதவியேற்றார்.
பிரதமர் மோடி தலைமையிலான அரசு மூன்றாவது முறையாக பதவியேற்றுள்ள காரணத்தால் இந்த ஆட்சியின் மீது பல எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளது. மேலும் தேர்தல் வாக்குறுதிகள் விரைவில் நிறைவேற்றப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வரிசையில் தான் 8வது ஊதியக்குழு அமைப்பது குறித்து தகவல்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பத்து ஆண்டுகளுக்கு ஒரு முறை இந்த ஊதியக்குழு வானது அமல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் அடிப்படையில் தான் கடந்த 2016-ம் ஆண்டு 7வது ஊதியக்குழு அமல்படுத்தப்பட்டது. எனவே வரும் 2026- ம் ஆண்டில் 8-வது ஊதியக்குழு அமல்படுத்தப்படும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் முதல் ஊதியக்குழு 1946-ம் ஆண்டு ஜனவரி மாதம் அமல்படுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இத்திட்டத்தை அமல்படுத்துவதன் மூலம் கிட்டத்தட்ட 49 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் 68 லட்சம் ஓய்வூதியதாரர்கள் பயனடைவார். இந்த 8-வது ஊதியக் குழுவின் ஃபிட்மென்ட் ஃபாக்டர் மற்றும் அவர்களின் சம்பளமும் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.
அதிலும் இந்த வருடம் நிச்சயம் ஃபிட்மென்ட் ஃபாக்டர் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. ஃபிட்மென்ட் ஃபாக்டர் என்பது ஊதிய உயர்வில் கடைபிடிக்கப்படும் ஒரு முக்கிய சூத்திரமாகும். இதுமட்டுமன்றி இத்திட்டத்தின் மூலம் பல சலுகைகள் வழங்கப்படும் என்றும் கூறப்படுகிறது.
கடந்த முறை 2.57 மடங்காக இருந்த ஃபிட்மெண்ட் ஃபாக்டர் தற்போது 3.68 மடங்காக அதிகரிக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. கடந்த ஊதியக் குழுவை ஒப்பிடும்போது இந்த வருடம் ஃபிட்மென்ட் ஃபாக்டர் அதிகமாக இருப்பதால் உதியம் அதிக அளவில் உயரும் என்று கூறப்படுகிறது.
இதன்படி பார்த்தால் அடிப்படை ஊதியமாக ரூ.18,000 பெறும் அதிகாரிகள், இந்த 8வது ஊதியக்குழு அமல்படுத்தப்பட்ட பிறகு ரூ.26,000 ஊதியம் பெறுவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.