இரண்டு கட்டமாக மாணவ மாணவிகளுக்கு பரிசளிக்கும் விஜய்! வெளியான முக்கிய அறிவிப்பு!

0
137
Vijay will give gifts to students in two phases
#image_title

தமிழகத்தில் நடந்து முடிந்த பொதுத் தேர்வில் மாவட்ட அளவில் முதல் மூன்று மதிப்பெண்களை பெற்று வெற்றி அடைந்த மாணவ மாணவிகளுக்கு நடிகர் விஜய் அவர்கள் பரிசளிக்கவுள்ளது தொடர்பாக முக்கிய அறிவிப்பு ஒன்றை தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச் செயலாளர் என்.ஆனந்த் அவர்கள் வெளியிட்டுள்ளார்.

நடிகர் விஜய் அவர்கள் கடந்த ஆண்டு தமிழகத்தில் மாவட்ட அளவில் 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் மாநிலம் மற்றும் மாவட்ட அளவில் முதல் மூன்று மதிப்பெண்கள் எடுத்த மாணவ மாணவிகளுக்கு நடிகர் விஜய் ஊக்கத் தொகையும் சான்றிதழ்களையும் வழங்கினார்.

இதையடுத்து இந்த ஆண்டும் பொதுத் தேர்வில் மாநில அளவில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவ மாணவிகளுக்கும் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவ மாணவிகளுக்கும் வாழ்த்துக்கள் தெரிவித்தார். இந்நிலையில் தற்பொழுது மாவட்ட வாரியாக 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவ மாணவிகளுக்கு ஊக்கத் தொகை மற்றும் சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி குறித்து முக்கிய அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது.

அதன்படி இந்த முறை 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் மாநில மற்றும் மாவட்ட அளவில் முதல் மூன்று மதிப்பெண்களை பெற்ற மாணவ மாணவிகளுக்கு இரண்டு கட்டமாக ஊக்கத் தொகையும் பரிசுப் பொருட்களையும் நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் அவர்கள் வழங்குவார் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் முதல் கட்டமாக ஜூன் 28ம் தேதி கோவை, அரியலூர், தர்மபுரி, ஈரோடு, திண்டுக்கல், கன்னியாகுமரி, கரூர், கிருஷ்ணகிரி, தென்காசி, நீலகிரி, சிவகங்கை, சேலம், ராமநாதபுரம், புதுக்கோட்டை, தூத்துக்குடி, தேனி, திருநெல்வேலி, மதுரை, நாமக்கல், திருப்பூர், விருதுநகர் ஆகிய 21 மாவட்டங்களில் மாவட்ட அளவில் முதல் மூன்று மதிப்பெண்களை பெற்ற மாணவ மாணவிகளுக்கு ஊக்கத்தொகையும் சான்றிதழையும் நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் அவர்கள் வழங்கவுள்ளார்.

அதன் பின்னர் ஜூலை 3ம் தேதி சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி, புதுச்சேரி, மயிலாடுதுறை, நாகப்பட்டிணம், தஞ்சாவூர் ஆகிய 9 மாவட்டங்களில் மாவட்ட அளவில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ மாணவிகளுக்கும் சான்றிதழையும், ஊக்கத்தொகையும் வழங்கவுள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.