VADHA NARAYANAN: வந்த நோய்களை அழிக்காமல் விடாது இந்த இலை!! அட இத்தனை நாளா இதன் மருத்துவ குணங்கள் தெரியாமல் போய்விட்டதே!!

VADHA NARAYANAN: வந்த நோய்களை அழிக்காமல் விடாது இந்த இலை!! அட இத்தனை நாளா இதன் மருத்துவ குணங்கள் தெரியாமல் போய்விட்டதே!!

உடலில் ஏற்படும் நோய் பாதிப்புகளை மருந்து,மாத்திரை இன்றி எளிதில் குணமாக்கி கொள்ள கீரைகளை உணவாக எடுத்துக் கொள்ள வேண்டும்.அதிலும் சில வகை கீரைகள் உடலுக்கு எண்ணற்ற பலன்களை கொடுக்க கூடியவையாக இருக்கிறது.அதில் ஒன்று தான் வாதநாராயணன்.இவை பக்கவாதம்,முடக்கு வாதம்,பித்தம்,கபம்,மூட்டு வலி,நரம்பு தளர்ச்சி உள்ளிட்ட பாதிப்புகளை குணமாக்க உதவுகிறது.

கை,கால்களில் வலி ஏற்பட்டால் வாத நாராயண இலையை அரைத்து அவ்விடத்தில் பூசி விட்டால் அவை சில சில மணி நேரத்தில் சரியாகி விடும்.அதேபோல் வாத நாராயண இலையை நீரில் போட்டு காய்ச்சி குடித்து வந்தால் கை,கால் ஏற்படுவது தடுக்கப்படும்.

வாதநாராயணன் இலையை கடுகு எண்ணெயில் போட்டு காய்ச்சி மூட்டு பகுதியில் தடவி வந்தால் அவை சில தினங்களில் குணமாகி விடும்.மூட்டு பகுதியில் ஏற்படும் குடைச்சலை குணமாக்க கடுகு எண்ணெய் மற்றும் வாத நாராயணன் இலையை அரைத்து மூட்டு பகுதியில் தடவலாம்.

பக்கவாதத்தால் அவதியடைந்து வருபவர்கள் வாதநாராயணன் இலையை உலர்த்தி பொடியாக்கி தினமும் இரவு உணவிற்கு பின்னர் 1/2 ஸ்பூன் சாப்பிட்டு வந்தால் அவை சில வாரங்களில் சரியாகி விடும்.

வாதநாராயணன் இலையில் கசாயம் செய்து குடித்து வந்தால் உடலில் உள்ள வாத நீர் மலம் வழியாக வெளியேறி விடும்.உடலில் பித்தம் இருப்பவர்கள் வாதநாராயணன் கீரையை துவையல் செய்து சாப்பிட்டு வந்தால் தீர்வு கிடைக்கும்.

நரம்பு தளர்ச்சி பாதிப்பு இருப்பவர்கள் வாதநாராயணன் இலையை அரைத்து விளக்கெண்ணெயுடன் கலந்து சாப்பிட்டு வந்தால் தீர்வு கிடைக்கும்.வாதநாராயணன் இலை,திப்பிலி,மிளகு ஆகியவற்றை சிறிதளவு எடுத்து ஒரு கப் நீரில் போட்டு காய்ச்சி வடிகட்டி குடித்து வந்தால் பக்கவாதம்,மூட்டுவாதம்,குதிகால் வலி ஆகியவை குணமாகும்.