லால்குடி தொகுதி காலியாக இருப்பதாக அறிவிப்பு- திமுக எம்எல்ஏ போஸ்டால் திடீர் பரபரப்பு!!
திருச்சி மாவட்டம் லால்குடி சட்டமன்ற தொகுதியின் எம்எல்ஏவாக சௌந்தரபாண்டியன் உள்ளார்.தொடர்ச்சியாக மூன்று முறையும் லால்குடியில் வெற்றி பெற்று எம்எல்ஏ பதவியை தக்கவைத்து வருகிறார்.தமிழக அரசானது ஒவ்வொரு தொகுதியிலும் மக்களுக்கு ஏற்ற பல நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறது.அந்த வகையில் திருச்சியில் லால்குடி தொகுதியில் மக்கள் பல நாட்களாக கோரிக்கை விடுத்து வந்த பேருந்து நிலையத்தை கட்டிக் கொடுத்துள்ளது.
அதுமட்டுமின்றி வட்டாட்சியர் அலுவலகத்தில் புதிய அலுவலகம் மேலும் சார்பதிவாளர் அலுவலகம் உள்ளிட்டவைகளை கட்டுவதற்கு இடங்களையும் பார்த்து வருகிறது.அந்த வகையில் இது குறித்து அமைச்சர் கே என் நேரு நேரில் சென்று நேற்று ஆய்வு செய்தார்.மேற்கொண்டு இது குறித்த பதிவையும் தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டார்.ஆனால் இதில் முக்கிய நிர்வாகியாக கலந்து கொள்ள வேண்டிய எம்எல்ஏ அங்கு இல்லை.
சமீபகாலமாகவே சௌந்தரபாண்டியன் அவர்கள் தொடர்ந்து உட்கட்சி மோதலால் எந்த ஒரு நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ள அழைப்பு விடுவதில்லை.இதன் உச்சகட்டமாக தான் கே என் நேரு பதிவிட்டு இருந்த பதிவுக்கு கீழ் சௌந்தரபாண்டியன் கமெண்ட் ஒன்று செய்துள்ளார்.அது தற்பொழுது ஆளும் கட்சிக்குள் பெருமளவு பேசப்பட்டு வருகிறது.
அதில் அவர் கூறியதாவது, லால்குடி சட்டமன்ற தொகுதியின் எம்எல்ஏ இயற்கை எய்து விட்டதால் அத்தொகுதி காலியான இடமாக அறிவிக்கப்பட்டது என்று கூறியுள்ளார். எந்த ஒரு பொது நிகழ்ச்சிகளிலும் தன்னை அழைக்காததின் விளைவாகத்தான் இவர் இப்படி போஸ்ட் செய்துள்ளதாக கூறுகின்றனர்.சொந்த தொகுதி எம்எல்ஏ வை எதற்கும் அழைக்காத ஆளும் கட்சி குறித்து பலரும் விமர்சனம் செய்து வருகின்றனர்.