மூக்கு சளி பழம்: நுரையீரல் சளி ஆஸ்துமா பிரச்சனைகளை சரி செய்யும் அபூர்வ பழம் இது!!

Photo of author

By Divya

மூக்கு சளி பழம்: நுரையீரல் சளி ஆஸ்துமா பிரச்சனைகளை சரி செய்யும் அபூர்வ பழம் இது!!

மூக்கு சளி அதாவது நறுவல்லி என்று அழைக்கப்படும் பழம் அதிக ஊட்டச்சத்துக்கள் நிறைந்து மூலிகை பழமாகும்.இந்த பழம் மரம் வெப்ப மண்டல பகுதிகளில் செழிப்பாக வளரக் கூடியவை.மே மற்றும் ஜூன் மாதங்களில் மட்டுமே இந்த பழங்களை காண முடியும்.இந்த மரம் சாலையோரங்களிலும்,காட்டுப்பகுதிகளிலும் எளிதில் வளரக் கூடியவை.

மூக்கு சளி பழம் ஆரஞ்சு அல்லது பிங்க் நிறத்தில் காணப்படக் கூடியவை.இவை உடலிலுள்ள பல வகை நோய்களை எளிதில் குணமாக்க உதவுகிறது.இந்த பழத்தில் வைட்டமின்கள்,மினரல்,ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்திருக்கிறது.அடிக்கடி நறுவல்லி(மூக்கு சளி) பழம் சாப்பிட்டு வந்தால் உடலிலுள்ள நோய் எதிர்ப்பு சக்தி பல மடங்கு அதிகரிக்கும்.

இப்பழத்தில் ஜூஸ் செய்து குடித்து வந்தால் ஆஸ்துமா பிரச்சனை முழுமையாக குணமாகும்.சளி,இருமல் பாதிப்பு இருபவர்கள் நறுவல்லி பழத்தில் தேநீர் போட்டு அருந்தி வரலாம்.

மூக்கு சளி பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் ஆண்மை குறைபாடு அடியோடு நீங்கும்.உடல் சூடு உள்ளவர்கள் தினமும் 5 மூக்கு சளி பழம் சாப்பிட்டு வரலாம்.உடலில் படிந்திருக்கும் தேவையற்ற கொழுப்புகளை கரைத்து உடலை ஆரோக்கியமாகவும்,பிட்டாகவும் வைத்துக் கொள்ள நறுவல்லி(மூக்கு சளி) பழத்தை சாப்பிட்டு வரலாம்.

இந்த பழத்தில் அதிகளவு வைட்டமின் சி சத்து நிறைந்திருப்பதால் இதை அடிக்கடி சாப்பிடுவதன் மூலம் ஏகப்பட்ட மருத்துவ குணங்களை பெற முடியும்.பைல்ஸ் பாதிப்பால் அவதியடைந்து வருபவர்கள் தினமும் நறுவல்லி பழ ஜூஸ் அருந்தி வந்தால் உரியத் தீர்வு கிடைக்கும்.

கல்லீரலில் உள்ள நச்சுக் கழிவுகளை வெளியேற்ற நறுவல்லி பழம் சாப்பிட்டு வரலாம்.அதேபோல் சருமம் தொடர்பான அனைத்து பாதிப்புகளையும் சரி செய்ய நறுவல்லி பழம் சிறந்த தீர்வாக உள்ளது.