15 நாட்களில் குடி பழக்கத்திற்கு குட் பாய் சொல்ல வைக்கும் பவர்புல் நாட்டு வைத்தியம்!! ட்ரை பண்ணுங்கள்!!

Photo of author

By Divya

15 நாட்களில் குடி பழக்கத்திற்கு குட் பாய் சொல்ல வைக்கும் பவர்புல் நாட்டு வைத்தியம்!! ட்ரை பண்ணுங்கள்!!

குடிப்பழக்கம் உங்கள் உடல் ஆரோக்கியத்தையும்,குடும்ப நிம்மதியையும் முழுமையாக கெடுக்கிறது.சிலர் குடிப்பழக்கத்தை நிறுத்த எவ்வளவோ முயல்வார்கள்.ஆனால் மனதளவில் குடியை முழுமையாக நிறுத்த வேண்டுமென்ற கொள்கை இருந்தால் மட்டுமே குடிப்பழக்கத்தை நிறுத்த முடியும்.

அந்த வகையில் குடிப்பழக்கத்தை நிறுத்த வேண்டுமென்று நினைப்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள நாட்டு வைத்தியத்தை தொடர்ந்து பின்பற்றி வந்தால் நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும்.

தேவையான பொருட்கள்:-

1)கொய்யா இலை
2)தண்ணீர்

செய்முறை:-

10 கொய்யா இலையை அரைத்து சாறு எடுத்து வைத்துக் கொள்ளவும்.பிறகு அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி சூடாக்கவும்.அதன் பின்னர் அரைத்த கொய்யா இலை சாற்றை அதில் சேர்த்து சுண்டக் காய்ச்சி அருந்தி வந்தால் குடிப்பழக்கம் மெல்ல மெல்ல கட்டுப்படும்.

தேவையான பொருட்கள்:-

1)சுக்கு
2)கொத்தமல்லி விதை
3)ஜாதிக்காய்
4)வில்வ இலை பொடி

செய்முறை:-

ஒரு உரலில் சிறு துண்டு சுக்கு,ஒரு தேக்கரண்டி கொத்தமல்லி விதை மற்றும் அரை ஜாதிக்காய் சேர்த்து உரலில் போட்டு இடித்து பொடியாக்கி கொள்ளவும்.அதன் பின்னர் அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து ஒரு கப் தண்ணீர் ஊற்றி சூடாக்கவும்.பிறகு அரைத்த பொடி மற்றும் வில்வ இலை பொடி ஒரு தேக்கரண்டி அளவு போட்டு கொதிக்க வைத்து வடிகட்டி குடித்து வந்தால் குடிப்பழக்கத்திற்கு நிரந்தர தீர்வு கிடைக்கும்.

தேவையான பொருட்கள்:-

1)கருப்பு மிளகு
2)வர மல்லி
3)ஏலக்காய் விதை
4)எலுமிச்சை விதை

செய்முறை:-

ஒரு உரலில் 1/4 தேக்கரண்டி கருப்பு மிளகு,1/2 தேக்கரண்டி வர மல்லி,ஒரு ஏலக்காயின் விதை மற்றும் 5 எலுமிச்சை விதையை போட்டு இடித்துக் கொள்ளவும்.பின்னர் அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி சூடாக்கவும்.அதன் பின்னர் இடித்த பொடியை அதில் சேர்த்து காய்ச்சி குடித்து வந்தால் குடிப்பழக்கத்திற்கு உரியத் தீர்வு கிடைக்கும்.