ரேஷன் அட்டை மற்றும் மாதம் ஆயிரம் இவர்களுக்கு மட்டும் தான்!! கோட்டை வட்டாரத்தின் புதிய அப்டேட்!!

Photo of author

By Rupa

ரேஷன் அட்டை மற்றும் மாதம் ஆயிரம் இவர்களுக்கு மட்டும் தான்!! கோட்டை வட்டாரத்தின் புதிய அப்டேட்!!

தமிழக அரசானது பெண்களுக்குரிய பல நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் கட்டணமில்லா பேருந்து பயணம் குடும்ப அட்டை உள்ள பெண்மணிகளுக்கு மாதம் ஆயிரம் என அனைத்தையும் வழங்குகிறது.அந்த வரிசையில் மகளிருக்கு ஆயிரம் வழங்கும் கலைஞர் உரிமை தொகை திட்டத்தில் தகுதி வாய்ந்தும் கிடைக்காத நபர்கள் பலர் உள்ளனர்.இது குறித்து பலமுறை புகார் அளித்த காரணத்தினால் மீண்டும் விண்ணப்பம் வழங்கப்படும் என தமிழக அரசு தெரிவித்திருந்தது.

அதுமட்டுமின்றி அரசு பணியில் இருக்கும் ஊழியர்களின் மனைவிகள், மறுவாழ்வு முகாமிலிருக்கும் பெண்கள் என அனைவருக்கும் மகளிர் உரிமைத்தொகை கிடைக்க வழி செய்வதாகவும் தகவல்கள் வெளிவந்தது.இதனிடையே மக்களவைத் தேர்தல் வந்ததால் இதன் பணிகள் அப்படியே நிறுத்தி வைக்கப்பட்டது.அதேபோல புதிய ரேஷன் அட்டை விண்ணப்பித்தவர்களுக்கும் வழங்காமல் தேர்தல் நடத்தை விதிகள் காரணமாக ஒத்தி வைத்திருந்தனர்.

தற்பொழுது தேர்தல் முடிந்த காரணத்தினால் இது குறித்து தகவல்கள் வெளிவரும் என்று மக்கள் பெருமளவில் எதிர்பார்த்து உள்ளனர்.இச்சமயத்தில் மீண்டும் விக்கிரவாண்டி இடைத்தேர்தல் நடைபெற உள்ளதால் இத்த தேர்தல் முடிவடைந்த உடன் விண்ணப்பம் வழங்கப்படும் என்று கோட்டை வட்டாரங்கள் தெரிவித்துள்ளது. அவ்வாறு தேர்தல் முடிவடைந்த உடன் விண்ணப்பம் அளிக்கப்பட்டு மேற்கொண்டு இரண்டு லட்சம் பயனாளிகளை சேர்க்க உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

ஆனால் விண்ணப்ப படிவம் கேட்டு இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட பெண்மணிகள் உள்ளதால் யாருக்கெல்லாம் கிடைக்கும் என்பதில் சந்தேகம் எழுந்துள்ளது.குறிப்பாக வயது முதிர்வடைந்தோர் மற்றும் உரிமைத்தொகை கோட்பாடுகளுக்கு கீழ் இருப்பவர்களுக்கு முதல் உரிமை வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளனர்.தேர்தல் முடிவடைந்த உடன் புதிய ரேஷன் கார்டு வழங்குவதோடு கூடுதலாக மகளிர் உரிமைத் தொகை கிடைக்க விண்ணப்பங்கள் அளிக்கப்படும் என்று தெரிவித்துள்ளனர்.