ஆதொண்டை: உடலிலுள்ள சகல வியாதிகள் ஒழியும்.. ஆடி மாதத்தில் அதிகம் பயன்படுத்தப்படும் மூலிகை இது!!

Photo of author

By Divya

ஆதொண்டை: உடலிலுள்ள சகல வியாதிகள் ஒழியும்.. ஆடி மாதத்தில் அதிகம் பயன்படுத்தப்படும் மூலிகை இது!!

நம் முன்னோர்கள் குளிர்காலத்தில் அதிகம் பயன்படுத்தி வந்த மூலிகைகளில் ஒன்று ஆதொண்டை.இந்த மூலிகை வறண்ட நிலத்திலும் புதர் போல் வளரும் தன்மை கொண்டது.ஆதொண்டையின் பழங்கள் உருண்டை வடிவில் காட்சியளிக்கும்.இவை இராமநாதபுர மாவட்டத்தில் தான் பெரும்பாலும் காணப்படுகிறது.

ஆதொண்டை கோடை காலத்தில் பூ பூத்து,மழைக்காலத்தில் காய்ப்புக்கு வருகிறது.இந்த பழத்தில் அதிகளவு கால்சியம் சத்துக்கள் நிறைந்திருக்கிறது.இந்த செடியின் இலை,பூ,வேர்,பழம் அனைத்தும் மருத்துவ குணங்கள் நிறைந்தவை.

ஆதொண்டை செடியின் வேர் மற்றும் இலையை அரைத்து சாறு எடுத்து அருந்தி வந்தால் இரத்த சர்க்கரை அளவு கட்டுப்படும்.கண்பார்வை குறைபாடு இருப்பவர்கள் ஆதொண்டை இலையில் கசாயம் செய்து குடித்து வரலாம்.

பொதுவாக ஆடி மாதம் மழைபெய்யும் காலமாக இருக்கிறது.இந்த சமயத்தில் கிருமி தொற்று,சளி,இருமல்,காய்ச்சல் மற்றும் சுவாசம் தொடர்பான பல்வேறு பாதிப்புகள் ஏற்படும்.இதை சரி செய்ய ஆதொண்டை இலையை சமைத்து உண்டு வரலாம்.

அதேபோல் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைபாடு இருப்பவர்கள் ஆதொண்டை இலையில் கசாயம் செய்து குடித்து வரலாம்.உடல் எலும்புகள் வலிமைபெற ஆதொண்டை இலையை அரைத்து சாப்பிட்டு வரலாம்.ஆதொண்டை இலையின் சாற்றை நெற்றில் பூசினால் தலைவலி முழுமையாக குணமாகும்.

சிறுநீர் தொடர்பான பாதிப்புகள் குணமாக ஆதொண்டை இலையில் துவையல் செய்து சாப்பிட்டு வரலாம்.ஆதொண்டை காயை அரைத்து தேங்காய் எண்ணையில் போட்டு காய்ச்சி மூட்டு பகுதியில் தடவி வந்தால் வலி,வீக்கம் அடியோடு குணமாகும்.