மனக்கவலை நீங்க.. உடல் ஆரோக்கியம் பெற.. இரவில் இந்த பால் மட்டும் குடியுங்கள் போதும்!!
அன்றாட வாழ்வில் பல காரணங்களால் உடல் சோர்வு,மனச்சோர்வு ஏற்படுகிறது.இதனால் இரவில் நிம்மதியற்ற தூக்கத்தை அனுபவிக்கும் நிலை ஏற்படுகிறது.மனிதர்களுக்கு குறைந்தது 8 மணி நேர உறக்கம் அவசியம்.அவ்வாறு இருக்கையில் நிம்மதியான உறக்கத்தை அனுபவிக்கவில்லை என்றால் அவை உடலில் நோய் உருவாவதற்கு வழிவகை செய்து விடும்.
இதுபோன்ற பாதிப்புகளை தவிர்க்க தினமும் ஒரு கிளாஸ் ஜாதிக்காய் பால் அருந்தலாம்.ஜாதிக்காய் நம் உடலுக்கு ஏகப்பட்ட நன்மைகளை வழங்கக் கூடிய ஒரு மூலிகை.இதை பாலில் கலந்து குடித்து வந்தால் உடலில் உள்ள பல நோய்கள் குணமாகிவிடும்.
தேவையான பொருட்கள்:-
1)பசும்பால்
2)ஜாதிக்காய்
3)தேன்
செய்முறை:-
முதலில் ஒரு ஜாதிக்காயை உரலில் போட்டு இடித்து எடுத்துக் கொள்ளவும்.பின்னர் அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் பால் ஊற்றி சூடாக்கவும்.
அதன் பின்னர் இடித்து வைத்துள்ள ஜாதிக்காய் பொடியை அதில் போட்டு மிதமான தீயில் 5 நிமிடங்களுக்கு கொதிக்க விட்டு அடுப்பை அணைக்கவும்.
பிறகு இதை ஒரு கிளாஸிற்கு வடிகட்டி சிறிது தேன் சேர்த்து இரவு நேரத்தில் குடித்து வந்தால் மனக் கவலை,மனச்சோர்வு,உடல் சோர்வு நீங்கி நிம்மதியான தூக்கம் கிடைக்கும்.
ஜாதிக்காயில் நிறைந்துள்ள ஊட்டச்சத்துக்கள் உடலில் நோய் ஏற்படுவதை தடுக்கிறது.செரிமான பிரச்சனை இருப்பவர்களுக்கு ஜாதிக்காய் பால் சிறந்த தீர்வாக இருக்கும்.
இந்த ஜாதிக்காய் பால் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.ஜாதிக்காயில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உடலில் உள்ள செல்களை பாதுகாக்கிறது.