BURNS: சமைக்கும் போது தீக்காயம் ஏற்பட்டுவிட்டதா.. உடனே இதை செய்யுங்கள்!!
உங்களில் பலர் உணவு சமைக்கும் பொழுது எதிர்பாராதவித சுட்டுக் கொள்வீர்கள்.தீக்காயங்கள் ஏற்பட்டால் முதலில் ஒரு தழும்பு போல் ஏற்பட்டு பின்னர் அவை கொப்பளித்து விடும்.இதனால் அதிக வலி மற்றும் எரிச்சல் ஏற்பட்டு அசௌகரிய சூழலை சந்திக்க நேரிடும்.
உடலில் சிறிதளவு காயங்கள் ஏற்பட்டாலே அவை தாங்க முடியாத எரிச்சலை உண்டாக்கும்.பெரியளவில் தீக்காயங்கள் ஏற்பட்டால் சொல்லவே வேண்டியதில்லை.தீக்காயங்கள்,கொப்பளங்கள் சில வாரங்களில் ஆறிவிடும் என்றாலும் அதை விரைவில் குணமாக்கி கொண்டால் தேவையற்ற இன்னல்களை சந்திக்கமால் இருக்க முடியும்.
தீக்காயங்கள் ஏற்பட்ட உடன் பதட்டப்படாமல் இருக்க வேண்டும்.பின்னர் தீ கொப்பளங்களை உடைக்காமல் இருக்க வேண்டும்.தண்ணீர் நிறைந்திருக்கும் கொப்பளத்தை உடைப்பதினால் அதில் இருக்கின்ற கிருமிகள் தோலில் பரவி தொற்றுபாதிப்பை ஏற்படுத்திவிடும்.
தீக்காயங்கள் ஏற்பட்ட பகுதியை குளிர்ந்த நீரில் 10 நிமிடங்கள் வைக்கவும்.பின்னர் காட்டன் துணியால் அவ்விடத்தை துடைக்கவும்.அதன் பின்னர் சோற்றுக்கற்றாழையில் உள்ள ஜெல்லை தீக்காயங்கள் மீது தடவி விடவும்.இவ்வாறு செய்வதினால் தீக்காயங்கள் உடனடியாக ஆறிவிடும்.
தீக்காய கொப்பள நீரை காட்டன் துணியால் துடைத்து பின்னர் சோப் பயன்படுத்தி கழுவவும்.அதன் பின்னர் காட்டன் பஞ்சு கொண்டு அவ்விடத்தை துடைக்கவும்.பிறகு தூயத் தேனை தீக்காயங்கள் மீது தடவவும்.இவ்வாறு செய்வதால் அவை சில தினங்களில் ஆறிவிடும்.