உடல் எடை குறைக்க தோசை உதவுமாம்.. அப்போ இதை கட்டாயம் தெரிந்து கொள்ளுங்கள்!!
நம் தென்னிந்தியாவில் உள்ள பிரபல உணவுகளில் ஒன்று தோசை.இதில் சாதா தோசை,மசால் தோசை,கார தோசை,பட்டை தோசை,பேம்லி தோசை என பல வெரைட்டிகள் இருக்கிறது.அரிசி மற்றும் உளுந்தை ஊறவைத்து மாவாக அரைத்து செய்யப்படும் ஒரு வகை உணவு தோசை.
உங்களில் பலர் தோசை வெறியர்களாக இருப்பீர்கள்.ஆனால் அதிகளவு தோசை சாப்பிட்டால் உடலில் என்ன நடக்குமென்று தெரியுமா? கவலை படாதீர்கள் தோசை சாப்பிடுவது ஒரு நல்ல பழக்கம் தான்.அடிக்கடி தோசை சாப்பிட்டு வந்தால் உடல் ஆரோக்கியம் மேம்படுமாம்.
தோசையில் என்னனென்ன சத்துக்கள் இருக்கிறது?
*கார்போஹேட்ரேட்டுகள்
*நார்ச்சத்துகள்
*வைட்டமின்கள்
*தாதுக்கள்
*புரதங்கள்
தோசை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்:
1)தோசை சாப்பிடுவதால் ஜீரண சக்தி அதிகரிக்கும்.
2)தோசை குடலின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.
3)தோசை இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.தோசை மாவு தயாரிக்க பயன்படுத்தும் உளுந்தில் அதிகளவு புரதம் இருக்கிறது.இவை இதய நோயின் அபாயத்தை குறைக்க உதவுகிறது.
4)உடலில் இரத்த ஓட்டத்தை சீராக வைத்துக் கொள்ள தோசை சப்பிடலாம்.
5)உடல் எடையை பராமரிக்க விரும்புபவர்கள் தோசை சாப்பிட்டு வரலாம்.இதில் இருக்கின்ற புரதம் மற்றும் நார்ச்சத்துக்கள் விரைவாக வயிறு நிரம்பிய உணர்வை கொடுக்கும்.
6)தோசையில் உள்ள கார்போஹைட்ரேட்டுகள் இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்துக் கொள்ள உதவுகிறது.
7)அதிலும் பச்சைப்பயறு,சோளம்,கம்பு,ராகி,மக்காசோளம் போன்ற சிறுதானியங்களை கொண்டு தயாரிக்கப்படும் தோசை உடலுக்கு பல ஆரோக்கிய நன்மைகளை கொடுக்கிறது.