PAATHA VALI: 3 நிமிடத்தில் குதிகால் வலி நீங்க தண்ணீரை இப்படி பயன்படுத்துங்கள்!!

0
251
PAATHA VALI: How to use water to get rid of heel pain in 3 minutes!!
PAATHA VALI: How to use water to get rid of heel pain in 3 minutes!!

PAATHA VALI: 3 நிமிடத்தில் குதிகால் வலி நீங்க தண்ணீரை இப்படி பயன்படுத்துங்கள்!!

பாதங்களில் வலி ஏற்பட்டு விட்டால் நிற்க,நடக்க சிரமமாக இருக்கும்.உடலில் மற்ற பாகங்களில் வலி ஏற்படுவதை போலவே பாதங்களிலும் வலி ஏற்படுகிறது.இதர பாக வலியை விட பாதங்களில் ஏற்படும் வலி மிகுந்த தொந்தரவுகளை கொடுக்கும்.

குறிப்பாக 50 வயதை கடந்தவர்களுக்கு இந்த கால் பாதவலி ஏற்படும்.பாதங்களில் தேய்மானம்,அடிபடுதல்,பாத அழுத்தம் போன்ற காரணங்களால் பாதவலி ஏற்படுகிறது.பாதங்களில் குதிகால்,கணுக்கால்,கால் விரல்களுக்கிடையே இந்த வலி ஏற்படுகிறது.பொதுவாக ஆண்களை காட்டிலும் பெண்கள் தான் பாதவலியால் அவதியடைந்து வருகின்றனர்.

பாதவலி ஏற்பட்டால் அதை அலட்சியம் கொள்ளாமல் உடனடியாக குணமாக்கி கொள்ளுங்கள்.இல்லையென்றால் பாதவலி லேசாக இருந்தாலும் அவை கடுமையாக அவஸ்தைகளை ஏற்படுத்தி விடும்.

கால் பாதவலி குணமாக எளிய வீட்டு வைத்தியங்கள்:

1)கல் உப்பு
2)தண்ணீர்

ஒரு பாத்திரத்தில் தண்ணீர் நிரப்பி சூடாக்கி கொள்ளவும்.பிறகு இதை ஒரு அகலமான பாத்திரத்தில் ஊற்றி கல் உப்பு போட்டு கால்களை கழுவவும்.இவ்வாறு செய்யும் பொழுது பாதங்களுக்கு அழுத்தம் கொடுக்கவும்.

1)எருக்கன் இலை
2)நல்லெண்ணெய்

ஒரு எருக்கன் இலையை தோசை கல் வைத்து மிதமான தீயில் சூடாக்கவும்.பிறகு அதன் மேல் சிறிது நல்லெண்ணெய் சேர்த்து வதக்கி கால் பாதங்களுக்கு ஒத்தடம் கொடுக்கவும்.

1)ஆப்பிள் சீடர் வினிகர்
2)தண்ணீர்

ஒரு பாத்திரத்தில் வெதுவெதுப்பான நீர் ஊற்றவும்.பிறகு அதில் ஒரு தேக்கரண்டி ஆப்பிள் சீடர் வினிகர் சேர்த்து பாதங்களை சுத்தம் செய்யவும்.இவ்வாறு தினமும் செய்து வந்தால் பாதவலி முழுமையாக குணமாகும்.

Previous articleவாக்களர் பதிவேட்டில் பெயர் இருந்தால் மட்டுமே ஓட்டு போட முடியும்.. போலி ஓட்டுக்கு தேர்தல் ஆணையம் முட்டுக்கட்டை!!
Next articleRickettsial Infection: தூதுவளை ஒன்று போதும்.. எலும்புருக்கி நோய் வேரோடு குணமாகும்!!