SINUS INFECTION: சைனஸ் பிரச்சனைக்கு உடனடி தீர்வு தரும் மூலிகை மருத்துவம்!! இதை மட்டும் செய்யுங்கள் போதும்!
காற்று மாசு,அலர்ஜி போன்ற காரணங்களால் சைனஸ் பாதிப்பு இளம் வயதிலேயே வந்துவிடுகிறது.மூக்கின் இரு பக்க குழிகளிலும் சளி நிரம்பி இருப்பதை தான் சைனஸ் என்று அழைக்கின்றோம்.
எதனால் சைனஸ் பாதிப்பு ஏற்படுகிறது?
1)அதிகப்படியான சளி
2)பாக்டீரியா தொற்று
3)ஒவ்வாமை
4)காற்றுமாசுபடு
சைன்ஸ் அறிகுறிகள்:
1)மூக்கில் நீர் வடிதல்
2)மூக்கடைப்பு
3)தலைவலி
4)மூச்சு விடுதலில் சிரமம்
ஒருவருக்கு சைனஸ் பாதிப்பு ஏற்பட்டால் அவை குறைந்தது நான்கு வாரங்களுக்கு நீடிக்கும்.தீவிர சைன்ஸ் பாதிப்பு நான்கு முதல் எட்டு வாரங்களுக்கு நீடிக்கும்.சைனஸ் பிரச்சனை இருப்பவர்கள் பால்,தயிர்,ஐஸ் க்ரீம்,சர்க்கரை,சாக்லேட் போன்றவற்றை கட்டாயம் தவிர்க்க வேண்டும்.அதேபோல் குளிர்ந்த திரவங்கள் அருந்துவதை தவிர்க்க வேண்டும்.
சைனஸ் பிரச்சனைக்கு எளிய வீட்டு வைத்திய குறிப்புகள்:
1)ஆவி பிடித்தல்
சைனஸ் பாதிப்பு சிறந்த தீர்வு ஆவி பிடித்தல்.சூடான நீரில் கற்பூரவல்லி இலை,துளசி சேர்த்து ஆவி பிடித்தால் மூக்கில் அடைபட்டு கிடந்த சளி கரைந்து வெளியேறும்.அதேபோல் தலையில் நீர் கோர்த்திருந்தால் அவை எளிதில் வெளியேறிவிடும்.
2)மஞ்சள் வேர் டீ
ஒரு கிளாஸ் அளவு நீரில் சிறிது மஞ்சள் வேர் மற்றும் ஒரு துண்டு இஞ்சியை இடித்து சேர்க்கவும்.இந்த நீரை கொதிக்க வைத்து பருகி வருவதன் மூலம் சைனஸை கட்டுக்குள் வைத்துக் கொள்ள முடியும்.
3)சூப்
10 தூதுவளை இலை,4 இடித்த மிளகு,2 பல் பூண்டு மற்றும் சிட்டிகை அளவு மஞ்சள் தூளை ஒரு பாத்திரத்தில் போட்டு ஒரு கப் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்.பிறகு தேவையான அளவு உப்பு சேர்த்து குடித்து வந்தால் சைனஸ் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும்.
4)புதினா + கிராம்பு நீர்
ஒரு பாத்திரத்தில் பாதியளவு தண்ணீர் ஊற்றி 1/4 கைப்பிடி அளவு புதினா மற்றும் 5 இலவங்கத்தை போட்டு கொதிக்க வைத்து ஆவி பிடித்து வந்தால் சைனஸ் பாதிப்பு முழுமையாக நீங்கும்.