BP மற்றும் இந்த பழக்கங்கள் இருந்தால் கன்பார்ம் கிட்னி பெயிலியர் தான்!! மக்களே எச்சரிக்கை!!
இந்த உடலில் மற்ற உறுப்புகளை காட்டிலும் சிறுநீரகம் அதிகப்படியான வேலைகளை செய்துக்கிறது. நமது உடம்பில் உள்ள நச்சுக்களை வெளியேற்றுவதில் இதன் பங்கு அதிகம். ஆனால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலருக்கும் இந்த சிறுநீரக செயலிழப்பு ஏற்பட்டு விடுகிறது. இது எதனால் ஏற்படுகிறது எப்படி அதனை பாதுகாக்க வேண்டும் என்பது குறித்து பார்க்கலாம்.
தினந்தோறும் நாம் அதிக அளவு தண்ணீரை எடுத்துக்கொள்ள முயற்சிக்க வேண்டும். அப்பொழுதுதான் நமது உடலில் உள்ள நச்சுக்கிருமிகள் அனைத்தும் சிறுநீர் வழியாக வெளியேறும்.
சிறுநீர் வந்தவுடனே அதனை வெளியேற்றிவிட வேண்டும். அதற்கு மாறாக அடக்கி வைத்திருந்தால் அது சிறுநீரக தொற்று போன்று விளைவுகளை ஏற்படுத்தும்.
அதேபோல மருத்துவரின் பரிந்துரை இன்றி எந்த ஒரு வழி நிவாரணங்களையும் சாப்பிடக்கூடாது.
ஒருவருக்கு உயரத்தை அழுத்தம் இருந்தாலும் சிறுநீரகத்தை பாதிக்கும். உயரத்த அழுத்தம் இருக்கும் பொழுது சிறுநீரகத்தில் உள்ள மெல்லிய நரம்புகள் நெப்ரான் அதிகளவில் பாதிப்படைய செய்யும். இதனால் விரைவிலேயே சிறுநீரக இழப்பு ஏற்படும்.
தொடர்ந்து சிறுநீரக தொற்று ஏற்பட்டால் அவர்கள் இதற்கு முறையாக சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும். இதை கண்டு கொள்ளாமல் இருக்கும் பட்சத்தில் சிறுநீரக இழப்பு ஏற்படலாம்.
குறைந்த அளவு உப்பு சேர்த்து உணவு எடுத்துக் கொள்ள வேண்டும். அதிக அளவு உப்பு சேர்த்து உணவுகளை உண்பதால் ரத்த அழுத்தம் உண்டாகும்.இது சிறுநீரக செயலிழப்புக்கு முக்கிய காரணியாக அமையும்.
கொழுப்பு அதிகம் உள்ள துரித உணவுகளை எடுத்துக் கொள்வதை தவிர்க்க வேண்டும்.
தொடர்ந்து புகை பிடித்து வந்தால் ரத்த நாளங்கள் பாதிக்கப்பட்டு சிறுநீரக செயலிழப்பு ஏற்படலாம்.
மன அழுத்தம் போன்ற காரணங்களினால் பலர் இரவு நேரங்களில் பல மணி நேரம் விழித்துள்ளனர்.இதுவும் சிறுநீரகத்தை அதிகளவு பாதிக்கும்.
பிற நாடுகளில் ரத்து செய்யப்பட்ட போலி மருந்து மாத்திரைகளை சாப்பிட்டாலும் சிறுநீரக செயலிழப்பு ஏற்படும்.