STROKE: இந்த உணவுகளை கட்டாயம் சாப்பிடாதீர்கள்!! பக்கவாதம் வருவதை தடுக்க சூப்பர் டிப்ஸ்!!
மனித மூளைக்கு செல்லும் இரத்தத்தில் அடைப்பு ஏற்படும் பொழுது அவ்விடத்தில் இருக்கின்ற மூளை செல்கள் இறக்கின்றன.இதனால் கை,கால்கள் அசைவின்றி போய்விடுகிறது.இதை தான் பக்கவாதம் என்று அழைக்கிறோம்.இந்த பாதிப்பு குழந்தைகள்,பெரியவர்கள் என்று யாருக்கு வேண்டுமாலும் ஏற்படலாம்.
தற்போதைய புள்ளி விவரப்படி உலகம் முழுவதும் சுமார் 5 கோடி பேர் பக்கவாத பாதிப்பால் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர் என்ற தகவல் ஆய்வின் மூலம் தெரிய வந்திருக்கிறது.
பக்கவாதம் ஏற்படுவதற்கான காரணங்கள்:
1)உயர் இரத்த அழுத்தம்
2)மது மற்றும் புகைப்பழக்கம்
3)இதய நோய்கள்
4)வயது முதுமை
5)உடல் பருமன்
6)உடலில் அடுபடுதல்
7)சர்க்கரை நோய்
8)சிறுநீரக பாதிப்பு
பக்கவாதத்திற்கான அறிகுறிகள்:
*வாய் ஒருபக்கமாக இழுத்துக் கொள்ளுதல்
*அதிக வியர்வை வெளியேறுதல்
*கை,கால் நடுக்கம்,நரம்பு தளர்ச்சி
*முகம்,கை கால்களில் உணர்வற்ற தன்மை
பக்கவாதம் வராமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?
அடிக்கடி இரத்த அழுத்த பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்.ஆரோக்கியமற்ற உணவுமுறை பழக்கத்தில் இருந்து விடுபட வேண்டும்.புகை மற்றும் மது பழக்கம் இருந்தால் அதில் இருந்து மீள வேண்டும்.உரிய நேரத்தில் உணவு உட்கொள்ள வேண்டும்.உடலில் இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்துக் கொள்ள வேண்டும்.
இரத்த கொதிப்பு இருப்பவர்கள் அதை அதிகரிக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.உடலில் இரத்த ஓட்டம் சீராக இயங்க ஆரோக்கிய உணவுகளை வேண்டும்.தினமும் உடற்பயிற்சி மேற்கொள்ள வேண்டும்.டீ,காபி போன்ற பானங்களை தவிர்த்து ஹெர்பல் ட்ரிங்க்ஸ் அருந்துவதை வழக்கமாக்கி கொள்ளவும்.