செந்தில் பாலாஜி தொடர்ந்து ED கையில் சிக்கும் அடுத்த அமைச்சர்.. டிஜிபி க்கு பரந்த அதிரடி கடிதம்!!
தமிழகத்தில் மணல் கொள்ளை குறித்து அமலாக்கத்துறை தொடர்ந்து விசாரணை செய்து வருகிறது.இதன் மூலம் சட்டவிரோதமாக பணப்பரிமாற்றமும் செய்துள்ளனர். அதாவது அரசாங்கம் அனுமதித்த அளவிற்கு மீறி மணல் எடுக்கப்பட்டதும் இந்த விசாரணை மூலம் வெளிவந்துள்ளது.அந்த வகையில் இதுவரை 4 ஆயிரம் கோடிக்கு மேல் மணல் கொள்ளை ழூலம் பரிவர்த்தனை செய்தது தெரிய வந்துள்ளது.இதுகுறித்து மேற்கொண்டு விசாரணையும் செய்தும் வருகின்றனர்.
அந்தவகையில் குவாரி சம்மந்தப்பட்ட ஒப்பந்ததாரர் மற்றும் அவரது வீடுகளில் சோதனை நடைபெற்று விசாரணை செய்தும் வருகின்றனர்.அதுமட்டுமின்றி சில மாதங்களுக்கு முன் திமுக நிர்வாகி ஒருவர் அமைச்சர் துரைமுருகன் மீதே குற்றம் சுமத்தினார்.அதாவது மணல் குவாரி என்ற பெயரில் அவரது குடும்பமே பல கோடிகளை சுரண்டி வருவதாகவும் தெரிவித்தார்.இதனையடுத்து அவர் கட்சியிலிருந்து நீக்கமும் செய்யப்பட்டார்.
மேலும் மணல் கொள்ளை குறித்து அரசாங்க நிர்வாகிகள் கொள்ளையர்களிடம் கேள்வி கேட்டால் அவர்களை தாக்குவதாகவும் புகார்கள் எழுந்தது.இதற்கு அண்ணாமலை உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்தனர்.அதேபோல மணல் கடத்தல் குறித்து எந்த ஒரு நவடைக்கையும் தமிழக அரசு கொண்டுக்கொள்வதில்லை என்ற புகாரும் எழுந்துள்ளது.இந்த மணல் கொள்ளையில் முக்கிய காரணமாக தமிழக அரசு உள்ளதாகவும்,இதுவரை 4 ஆயிரம் கோடிக்கும் மேல் பணப்பரிவர்த்தனை செய்யப்பட்டும் நடவடிக்கை எடுக்க கண்டுகொள்ள தவறிவிட்டதாக தற்போது டிஜிபி-க்கு அமலாக்கத்துறை கடிதம் அனுப்பியுள்ளது.
அதுமட்டுமன்றி தற்போது மீண்டும் மத்தியில் பாஜக அமைந்துள்ளதால் இந்த மணல் கொள்ளை விவகாரத்தில் வருமான வரித்துறை தலையிட உள்ளதாகவும் கூறுகின்றனர்.இதில் மத்தியின் பங்கு பெருமளவில் இருக்க வாய்ப்புள்ளதாகவும்,குறிப்பாக திமுக முக்கிய தலைகள் சிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.இதில் முதலாளாக அமைச்சர் துரைமுருகன் இருக்க வாய்ப்புள்ளதாக கூறுகின்றனர்.மேலும் செந்தில் பாலாஜி வருவாமான வரித்துறை பிடியில் சிக்கி வெளிவர முடியாமல் இருக்கும் நிலையில் தற்பொழுது அடுத்த அமைச்சர் இணைய உள்ளார்.