சோறு வடித்த கஞ்சி இருந்தால்.. தொப்பை தொடை கை பகுதியில் இருக்கும் கொழுப்பை கரைத்து விடலாம்!!
உடல் எடையை குறைக்கும் முயற்சியில் ஈடுபட்டிருப்பவர்கள் சாதம் வடித்த கஞ்சி தண்ணீரை அருந்தினாலே எதிர்பார்த்த பலன் கிடைத்து விடும்.ஆரோக்கியமற்ற துரித உணவுகளை உட்கொள்ளுதல்,உடல் உழைப்பு இல்லாமை,குடி பழக்கம் போன்ற காரணங்களால் உடலில் கொழுப்பு சேர்கிறது.
உடல் எடையை கட்டுக்குள் வைத்துக் கொள்வதில் அதிக அக்கறை செலுத்த வேண்டும்.இல்லையென்றால் உடலில் அதிகப்படியான கொழுப்புகள் சேர்ந்து மரணத்திற்கு வழிவகுத்து விடும்.உடல் எடையை குறைக்க ஜூஸ்,மூலிகை டீ குடிப்பது போன்று சாதம் வடித்த கஞ்சி நீரை அருந்தி வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
அரிசி வேக வைத்த நீரில் சிறிது உப்பு,சீரகத் தூள்,பெருங்காயத் தூள் சேர்த்து அருந்தி வந்தால் உடலில் தேங்கி கிடக்கும் தேவையற்ற கொழுப்புகள் கரைந்து விடும்.அரிசி கஞ்சி உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை வழங்குகிறது.
இந்த அரிசி வடித்த கஞ்சியில் மாவுச்சத்து அதிகம் நிறைந்திருக்கிறது.அது மட்டுமின்றி வைட்டமின்கள்,மெக்னீசியம்,நார்சத்து,துத்தநாகம்,மாங்கனீசு,கார்போ ஹைடிரேட் போன்ற சத்துக்கள் நிறைந்திருப்பதால் இவை ஒரு சிறந்த பானமாக திகழ்கிறது.
வடித்த சாதம் சேர்க்காமல் வெறும் கஞ்சி மட்டும் குடித்து வந்தால் வைற்றுப்பகுதியில் தேங்கி கிடக்கும் கெட்ட கொழுப்புகள் முழுமையாக கரைந்து உடல் ஆரோக்கியம் மேம்படும்.
இது தவிர வயிற்றுப்போக்கு,செரிமானக் கோளாறு,போடுகு,முடி உதிர்தல்,சரும பிரச்சனைகளுக்கு சாதம் வடித்த நீர் சிறந்த தீர்வாக இருக்கிறது.