இலவச “லேப்டாப்” மற்றும் “மிதிவண்டி”.. உடனே இதை செய்யுங்கள்!! கோட்டைக்கு பறந்த மெசேஜ்!!
தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு தமிழக அரசானது இலவச நோட்டு புத்தகங்கள்,உக்கத்தொகை போன்ற ஏராளனமா சலுகைகளை வழங்கி வருகிறது.குறிப்பாக ஜெயலலிதா ஆட்சியில் தான் பின் தங்கிய அரசு பள்ளி மாணவர்களுக்கு மிதிவண்டி வழங்கும் திட்டத்தை நடைமுறைப் படுத்தப்பட்டது.இதனைத் தொடர்ந்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் எந்த ஒரு பாரபட்சமின்றி பதினொன்றாம் வகுப்பு படிக்கும் அனைத்து மாணவர்களுக்கும் தற்பொழுது மிதிவண்டி வழங்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு வழங்கப்படும் மிதிவண்டிகள் தரம் குறைவாக இருப்பதாக மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களிடமிருந்து தொடர்ந்து புகார்கள் வந்துள்ளது.இதனை காங்கிரஸ் கட்சி மூத்த தலைவர் ப சிதம்பரம் சுட்டிக்காட்டி தனது எக்ஸ் வலைத்தளத்தில் பதிவு ஒன்றை போட்டுள்ளார்.அதில் அவர், தரமற்று அரசு வழங்கிய மிதிவண்டிகள் தற்பொழுது விற்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது இதனை மாற்றி தரும் படி அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார்.இவ்வாறு தரமற்ற மிதிவண்டிகளை தயாரித்துக் கொடுத்த நிறுவனம் எது என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
https://x.com/PChidambaram_IN/status/1806870945510162801
கூட்டணி கட்சியாக இருந்தாலும் மக்கள் மற்றும் மாணவர்களின் இந்த குறைகளை தீர்க்கும் வகையில் நேரடியாகவே தமிழக அரசிடம் தெரிவித்துள்ளார்.அதேபோல பன்னிரண்டாம் வகுப்பு படித்த மாணவர்களுக்கு தற்பொழுது வரை மடிக்கணினி வழங்காமல் உள்ளது இது குறித்தும் தமிழக அரசிடம் எடுத்துரைக்கலாம் என நெட்டிசன்கள் பலர் கமெண்ட் செய்து வருகின்றனர்.