ஆர்த்தியின் அழகுக்காக தான் ஜெயம் ரவி இதையெல்லாம் பார்த்தார்- சுசித்ரா பகீர் பேட்டி!!
சினிமா வட்டாரத்தில் தொடர்ச்சியாக விவாகரத்து குறித்த சர்ச்சை தான் பேசப்பட்டு வருகிறது.நடிகை சமந்தா நாக சைதன்யா என தொடங்கி தனுஷ் ஐஸ்வர்யா வரை பலரது விவாகரத்தும் தமிழக திரையுலகையே புரட்டிப் போட வைத்துள்ளது. சமீபத்தில் கூட இசையமைப்பாளர் மற்றும் பாடகியான ஜிவி பிரகாஷ் சைந்தவி விவாகரத்து குறித்தும் பரபரப்பாக பேசப்பட்டது.
அதுமட்டுமின்றி இசையமைப்பாளர் டி இமான் விவாகரத்திற்கு சிவகார்த்திகேயன் தான் காரணம் என்ற செய்தியும் ஒரு பக்கம் தீயாக பரவியது.இந்த நிலையில் இதில் கூடுதலாக நடிகர் ஜெயம் ரவி மற்றும் அவரது மனைவி ஆர்த்தி இணைந்துள்ளனர்.சமீபத்தில் இருவரும் விவாகரத்து பெற போவதாக தகவல்கள் கசிந்தது.அதற்கேற்றார் போல ஆர்த்தியும் தனது இன்ஸ்டா பக்கத்திலிருந்து ஜெயம் ரவியின் புகைப்படங்களை நீக்கியுள்ளார்.இதனால் இருவரும் விவாகரத்து பெறப் போவதாக கூறுகின்றனர்.
ஜெயம் ரவியின் மாமியார் தயாரிப்பு நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார்.இவருக்கு சங்கர் என்ற வளர்ப்பு மகனும் உள்ளார்.இவரால் தான் தற்பொழுது ஜெயம் ரவி ஆர்த்தி பிரிவதாக சோசியல் மீடியாவில் பல விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகிறது.தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா மேலும் ஜிவி பிரகாஷ் சைந்தவி உள்ளிட்ட விவாகரத்து குறித்து பாடகி சுசித்ரா பல சுவாரசிய தகவல்களை யூடியூப் பக்கத்தில் வெளியிட்டார்.
அதேபோல தற்பொழுது ஜெயம் ரவி மற்றும் ஆர்த்தியின் விவாகரத்து குறித்தும் கூறியுள்ளார்.அதில் அவர் தெரிவித்துள்ளதாவது, ஆர்த்தி மிகவும் வசந்தி வாய்ந்த ஆர்த்தி மிகவும் வசதி வாய்ந்த பெண். எப்பொழுதும் ஆடம்பர வாழ்க்கையை தான் எதிர்பார்ப்பார். ஆனால் ஜெயம் ரவி குடும்பமும் சினிமா திரையுலகில் மிகவும் கஷ்டப்பட்டு முன்னுக்கு வந்துள்ளனர். இதனால் ஜெயம் ரவி கார்த்தியின் விருப்பத்தை நிறைவேற்ற இரவு பகலாக உழைக்க வேண்டி இருக்கிறது.இவ்வளவு நாள் ஆர்த்தியின் அழகான முகத்தை பார்த்து ஜெயம் ரவி அமைதியாக இருந்தார்.அது எத்தனை நாள் கைக்கொடுக்கும்
மேற்கொண்டு வீட்டிற்கு சென்றால் கூட ஆர்த்தி மனநிலை எப்படி இருக்கும் என்று தெரிவதில்லை.இதனால்தான் இருவருக்கிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிகின்றனர் என்று கூறியுள்ளார். தற்போது சுசித்ரா பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.இதற்கு முன்னதாகவே ஜெயம் ரவி ஒரு விருது வாங்கும் விழாவில் மாமியாரின் விருப்பமில்லாமல் எந்த ஒரு முடிவும் எடுக்கப்படாது என்பதை முன் வைத்திருப்பார். தற்பொழுது அவராலே அவரது மகளின் வாழ்வு பறிபோகியுள்ளது.