மகளிர் உரிமைத் தொகை: இவர்கள் இதை உடனே செய்தால் மாதம் ரூ.1000 கன்பார்ம்!! மிஸ் பண்ணிடாதீங்க!!
கடந்த 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் முதல்வர் ஸ்டாலின் அவர்கள் மகளிர் உரிமை தொகை திட்டத்தை தொடங்கி வைத்தார்.இந்த திட்டத்தில் சுமார் 1.7 கோடி பேருக்கு தற்பொழுது உரிமை தொகை வழங்கப்பட்டு வருகிறது.நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் பிரச்சாரம் மேற்கொண்ட திமுகவினருக்கு பல்வேறு தரப்பில் இருந்து எதிர்ப்பு கிளம்பியது.மகளிர் உரிமை தொகை விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டவர்கள் முதல்வர்,அமைச்சர்களை சூழுந்து கொண்டு கேள்வி கேட்ட வீடியோ செய்திகளில் வெளியானதை அறிவீர்கள்.
மகளிர் உரிமை தொகை பெற விண்ணப்பித்தவர்களின் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டிருந்தால் அவர்களுக்கு ஒரு வாய்ப்பு வழங்கப்படும் என்று முதல்வர் தெரிவித்திருந்தார்.
அதன்படி முன்னாள் அரசு ஊழியர்களின் மனைவி,முன்னாள் கார்ப்பரேஷன் ஊழியர்களின் மனைவி,புதிதாக ரேஷன் கார்டு பெற்றவர்கள் மற்றும் புதிதாக திருமணமானவர்களின் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டு மகளிர் உரிமை தொகை திட்டத்தில் சேர்க்கப்படுவர் என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது..
நகராட்சி,மாநகராட்சி,ஊராட்சி அலுவலகங்கள் அல்லது இ-சேவை மையங்களில் விண்ணப்பிக்க வேண்டும்.நீங்கள் விண்ணப்பத்திற்கு சான்றாக பதிவு செய்த செல்போன் எண்ணிற்கு SMS அனுப்பி வைக்கப்படும்.ஏற்கனவே மேல்முறையீடு செய்தவர்களில் 1,48,000 பேரின் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள நிலையில் மேலும் கூடுதலாக 2,30,000 லட்சம் பேர் இணைக்கப்பட வாய்ப்புள்ளது என்ற தகவல் வெளியாகி இருக்கிறது.